இலங்கை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அணியினரின் இஸ்லாமியக் கண்காட்சி -2015

0
234

21 6

இந்த ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடும்; இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அணியினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற   இஸ்லாமியக் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் (13,14 ஜுன், 2015) நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள  அஹ்மதிய்யா முஸ்லிம் பள்ளிவாசலின் ஜுப்லி மண்டபத்தில்  இடம்பெற்றது.

  இந்தக் கண்காட்சியில் சிறுமிகளின் கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் வரலாற்றைச் சித்தரிக்கும் பல்வேறு ஆக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் மருத்துவ சிகிச்சை முகாம்களும் இடம்பெற்றன. கண் பரிசோதனை முகாமில் இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

அத்துடன் சிறுமிகள் மத்தியில் சித்திரப் போட்டிகளும்,  பெண்கள் மத்தியில் பழங்களைக் கொண்டு உணவு தயாரிக்கும் போட்டிகளும் இடம்பெற்றன. பெரும் எண்ணிக்கையானோர் இந்த கண்காட்சிக்கு வருகைத் தந்தமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு நிருபர் :- எம்.இஸட். ஷாஜஹான்15 11 12 16 17 20 19 218

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here