நீர்கொழும்பில் கொண்டாடப்பட்ட சர்வதேச அகதிகள் தினம்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியன்மார் நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் பங்கேற்பு

0
254

DSC08343DSC08283

சர்வதேச அகதிகள் தினமான இன்று (ஜுன் 20 ஆம் திகதி) நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனதின் ஊடாக (UNHCR) தஞ்சம் கோரிய நிலையில் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் மத்தியில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் (UNHCR)  இதனை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்விற்கு; கனடா, சுவிர்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவராலயங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள்,  வெளிவிவகார அமைச்சை சேர்ந்த அதிகாரிகள் குடியகல்வு திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட பலர் வருகைத் தந்திருந்தனர்.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு புகலிடம்  கோரிய  நிலையில் இலங்கையில் தங்கியுள்ள பாகிஸ்தானிய  அஹ்மதி முஸ்லிம்கள், பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களான    கத்தோலிக்கர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள்,  மியன்மாரைச் சேர்ந்த   ரெங்கிய இனத்தவர்கள்  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த அகதிகளுக்கு மத்தியில்  உதைப்பந்தாட்டம், கிரிக்கட், மெய்வல்லுனர் விளையாட்டுகள் மற்றும்  திறமைகளை  வெளிப்படுத்தும் வகையில்  பாடல் , ஆடல்,  இசைக் கருவிகளை இசைத்து பாடல், மெஜிக்  உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் சிறுவர் சிறுமியர் மற்றும் இளைஞர்கள் பங்குபற்றினர்.

DSC08333

இதேவேளை, சர்வதேச அகதிகள் தினத்தையிட்டு ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில்  2014 ஆம் அண்டு இறுதி வரை உலகெங்கும் 59.5 மில்லியன் பேர் அகதிகளாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வேறெந்த வருடங்களையும் விடவும் பெரும் எண்ணிக்கையான மக்கள் கடந்த வருடம் புகலிடம் தேடி சென்றுள்ளதாக எமக்கு கிடைக்கப் பெற்ற தரவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் 60 மில்லியன் தொகையினர் போர் காரணமாகவும் பிற அச்;சுறுத்தல்கள் காரணமாகவும்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்டோரில்  20 மில்லியன் தொகையினர் அகதிகள் என்பதுடன், அதில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பிள்ளைகள் ஆவர். இந்த எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்துச் வருகிறது. இவ்வாறு புகலிடம் தேடி வருபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டக் கூடிய சில நாடுகள் தமது நுழை வாயில்களை மூடுகின்றன’  என்று ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் (UNHCR) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.DSC08279(2)DSC08286நீர்கொழும்பு நிருபர் :- எம்.இஸட். ஷாஜஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here