நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் ஏழு மாடி கட்டம் உடைந்து விழும் அபாயம்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

0
107

2001 ஆம் ஆண்டு  திறக்கப்பட்ட நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் ஏழு மாடி கட்டம்  திடீரென்று உடைந்து விழும் அபாயம் இருப்பதாக தெரிவித்து  நீர்கொழும்பு வைத்தியசாலை அறக்கட்டளை மற்றும்  நீர்கொழும்பு நகர முக்கியஸ்த்தர்கள் சிலர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (17-4-2015) முறைப்பாடொன்றை செய்தனர்.

4

பாரிய  அசம்பாவிதம் ஒன்று ஏற்படுவதற்கு முன்பாக  நீதிமன்ற உதவியை நாடுவதற்காகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டது. நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்திலக்கவிடம் இது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்ட பின்னர் முறைப்பாடு செய்யப்பட்டது.

 

நீர்கொழும்பு வைத்தியசாலை அறக்கட்டளையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் இயன், அங்குரகாரமுல்ல விகாரையின் விகாராதிபதி கொந்தகே முல்ல ஞானசிறி தேரர், அருட் தந்தை ரொசைரோ, நீர்கொழும்பு வர்தக சங்கத்தின் தலைவர் பேர்னாட், சட்டத்தரணிகளான  கொட்பிறி குரெ, டியூடர் புளத்வெல, வினசன்ட் புளத்சிங்கள, நீர்கொழும்பு முன்னாள் நகராதிபதி ஹேர்மன் குரெரா உட்பட மேலும் பலர் இந்த முறைப்பாட்டை செய்ய பொலிஸ் நிலையம் வருகை தந்திருந்தனர்.

முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து முறைப்பாட்டை செய்தவர்கள் தரப்பிலிருந்த மதத் தலைவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் அபாயகரமான நிலை தொடர்பாக மேல் மாகாண சபை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. கட்டிடம் உடைந்து வீழ்ந்தால் ஐயாயிரம் நோயாளர்கள் வரையில் பலியாவர். எனவே இந்த வைத்தியசாலையை மத்திய அரசாங்கம் உடனடியாக தனக்குக் கீழ் கொண்டு வரவேண்டும் என்றனர்.

கட்டடிடத்தின் பல இடங்களிலும் உள்ள நீர் கசிவு, மழைக் காலங்களில்; லிப்ட் வழியாக நீர் ஓடுதல், நோயாளிகள் தங்கியுள்ள ‘வார்டு;;களில்’ நீர் கசிவு, கொங்ரீட்  பழுதடைந்திருத்தல்,  மின்சார கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் போன்றன 2001 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்;பட்ட ஏழு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடத்தில்  பல வருடங்களாக தொடர்ந்து இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு நிருபர் :- எம்.இஸட். ஷாஜஹான்