பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நீர்கொழும்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

0
158

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நீர்கொழும்பு மீனவர்கள்  இன்று திங்கட்கிழமை (6) காலை ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்டனர்.

நீர்கொழும்பு  கொத்தலாவலை பாலத்தின் கீழ் மீன்பிடிப்படகுகளை நிறுத்தி வைத்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன்போது அவர்கள் கோசங்களை எழுப்பியதுடன், சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.

பிற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும்  இரண்டு வகையான மீன்கள் நீர்கொழும்பில் கருவாட்டுத் தொழிலில் ஈடுபடுவோருக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்கள பயன்படுத்துவதற்கு எதிராகவும், இந்திய ரோலர் படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தலில் ஈடுபடுவதற்கு எதிராகவும்,   கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் ‘போர்ட் சிட்டிக்கு’ எதிர்ப்பு தெரிவித்ததும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கம்மல்துறை, பலகத்துறை, ஏத்துக்கால, கடற்கரைத் தெரு, குடாபாடு, பிட்டிபனை, தூவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய மீனவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

நீர்கொழும்பு நிருபர் :- எம்.இஸட். ஷாஜஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here