முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஷாபி ரஹீம் கம்பஹா மாவட்டத்தில் யானைச் சின்னத்தில்

0
159

safi Raheem Nomination(1)

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகின்ற நிலையில், மேல் மாகாண சபையின்  முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஷாபி ரஹீம் கம்பஹா மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

2004 ஆம் ஆண்டு  நடைபெற்ற மேல் மாகாண சபை தேர்தலில்  முதன் முதலாக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 3001 விருப்பு வாக்குகள் பெற்று மாகாண சபை உறுப்பினராகத்  இவர் தெரிவு செய்யப்படார். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற  மேல்மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிட்டு  12 ஆயிரத்து 344 விருப்பு வாக்குள் பெற்று வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்  முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட போது, அந்த தேர்தலில்;  கம்பஹா மாவட்டத்தில்  போட்டியிட்டு;  23 ஆயிரத்து 122 விருப்பு வாக்குகளைப்;  ஜனாப் ஷாபி ரஹீம் பெற்றார்;.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  மேல்மாகாண சபை தேர்தலில் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிட்டு  12 ஆயிரத்து 337 விருப்பு வாக்குளைப்  பெற்று மூன்றாவது முறையாகவும்  இவர் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார். கம்பஹா மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஒரே முஸ்லிம் வேட்பாளர் இவர் என்பது   குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு நிருபர் :- எம்.இஸட். ஷாஜஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here