மோட்டார் சைக்கிள் – லொறி விபத்தில் யுவதி பலி நீர்கொழும்பு தளுபத்தையில் சம்பவம்

0
171

மோட்டார் சைக்கிளுடன்   லொறி  மோதியதில் ஏற்பட்ட விபத்தில் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளார்  என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (13) முற்பகல்  910.30 மணியளவில் நீர்கொழும்பு , தளுபத்தை பல்லன் சேனை வீதியில் இடம்பெற்றுள்ளது.

தளுபத்தை பல்லன் சேனை வீதியைச் சேர்ந்த குருகுல சூரிய ஒசின் நிலுக்ஸி சந்ரா பெர்னாந்து என்ற 20 வயது யுவதியே சம்பவத்தில் பலியானவராவார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சம்பவத்தில் பலியான யுவதி மோட்டார் சைக்கிளில் தந்தையை ஏற்றிச் சென்று பிரதான வீதியில் இறக்கிவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதன் போதே தனது வீட்டுக்கு அண்மித்த இடத்தில் வைத்து  இவர் பயணித்த மோட்டார் சைக்கில் லொறியில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் போது யுவதி ஹெல்மட் அணிந்திருக்கவில்லை என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

சம்பவத்தை அடுத்து  லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த லொறி தளுபத்தை பிரதேசத்தில் உள்ள ஹாட்வெயார் ஒன்றுக்கு சொந்மானது எனவும், லொறியின் சாரதி மற்றும் இறந்த யுவதி ஆகியோரிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை எனவும் விசாரணைகளின் போது   மேலும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here