ரமழானில் சிறப்பு உணவாக கருதப்படும் நோன்புக் கஞ்சி

0
211

ரமழான் மாதம் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வரும் பிரதான உணவு  நோன்புக்
கஞ்சி ஆகும். தினமும் காலையில் எழுந்து நோன்பு இருந்து விட்டு மாலையில் இந்தக்  கஞ்சியினை அருந்தியே பெரும்பாலான முஸ்லிம்கள் நோன்பு திறக்கின்றனர். ரமழானில்   இப்தாரின்  சிறப்பு உணவாக இந்த நோன்புக் கஞ்சி கருதப்படுகிறது.

karikanji-final
ஓவ்வொரு ஊரிலும் பல்வேறு வகையான நோன்புக் கஞ்சிகள் தயாரிக்கப்படுகின்றன.
இவ்வாறு இடத்துக்கு இடம் நோன்புக் கஞ்சியின் செய்முறையும் சுவையும்
வேறுபட்டாலும் கூட நோன்புக் கஞ்சியின் சுவையே தனிச்சுவை வாய்ந்ததாக காணப்படுகிறது.

masalakanji-f
இந்த நோன்புக் கஞ்சி தன்னுள்ளே பல மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. நாள்
முழுவதும்;; உண்ணாமலும் பருகாமலும் இருக்கும் போது ஏற்படும் சோர்வை நீக்கி  புத்துணர்வு பெறவும் வாயுத் தொல்லைகள் நேர்ந்து விடாமல் இருக்கவும் நோன்புக் கஞ்சி ஓர் சிறந்த உணவாகும். நோன்புக் கஞ்சியில்  அரிசி> வெந்தயம்> பாசிப்பருப்பு,  மஞ்சள்> இஞ்சி> பூண்டு> கராம்பு> பட்டை> ஏலக்காய் போன்றவை சேர்க்கப்படுவதால் அவை உடலிலுள்ள களைப்பை போக்கி உடலுக்கு பலத்தையும் உற்சாகத்தையும்  கொடுக்கிறது.

இந்த நோன்புக் கஞ்சி தன்னுள்ளே பல மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. நாள் முழுவதும்;; உண்ணாமலும் பருகாமலும் இருக்கும் போது ஏற்படும் சோர்வை நீக்கி புத்துணர்வு பெறவும் வாயுத் தொல்லைகள் நேர்ந்து விடாமல் இருக்கவும் நோன்புக் கஞ்சி ஓர் சிறந்த உணவாகும். நோன்புக் கஞ்சியில்  அரிசி> வெந்தயம்> பாசிப்பருப்பு, மஞ்சள்> இஞ்சி> பூண்டு> கராம்பு> பட்டை> ஏலக்காய் போன்றவை சேர்க்கப்படுவதால் அவை உடலிலுள்ள களைப்பை போக்கி உடலுக்கு பலத்தையும் உற்சாகத்தையும்
கொடுக்கிறது.

தொகுப்பு: எஸ்.நுஷ்ரத் ஜஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here