லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பு மாணவர்களின் ‘உடற் சுகநல நடைபவனி’

0
82

DSC08430 DSC08420 DSC08416 DSC08410 DSC08415

நீர்கொழும்பு ஹொஸ்ட் லயன்ஸ் கழகத்தின் தலைவர் சுனில் வட்டவல, இணைப்பாளர் வைத்தியர் லொரேட்டா வர்ண குலசூரிய, உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் சுதத் பியசிறி உட்பட  கழகத்தின் முக்கியஸ்த்தர்கள்   பலர் இந்நிகழ்வில் பங்கு பற்றினர்.

கடோல்கலேயில் அமைந்துள்ள நீர்கொழும்பு ஹொஸ்ட் லயன்ஸ் கழகத்தின் அலுவலகத்தின் முன்பாக  ஆரம்பமான  நடைபவனி  நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து நீர்கொழும்பு பிரதான வீதி வழியாக மீணடும் ஆரம்பித்த இடத்தை வந்தடைந்தது.

இந்த நடைபவனியில் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த  எட்டு பிரபல பாடசாலைகளில் இருந்து  (சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகள்) தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பங்கு பற்றினர்.
மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் அதிக எடை மற்றும் நீரிழிவு, மாரடைப்பு உட்பட பல்வேறு  நோய்களில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில் நீர்கொழும்பு ஹொஸ்ட் லயன்ஸ் கழகம் தெரிவு செய்யப்பட்ட 750 மாணவர்களுக்கு உடற் பயிற்சி வேலைத்திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருவதுடன் அதன் ஒரு அங்கமாக இந்த நடை பவனி இடம்பெறுவதாக லயன்ஸ் கழகத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here