அதிகம் செல்பி எடுப்பவர்கள் சுயநலம் உடையவர்கள்!!! மனநோய் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை

0
123

ගැහැණු ළමයි සෙල්ෆී ගන්නේ බලාගෙනයි 2
ஸ்மார்ட் போன் வாசிகள் மத்தியில் பிரபலமான `செல்பி` என்ற தன்னைத்தானே படம்  எடுத்துக்கொள்வது ஃபேஷனாக இருக்கிறது. காலையில் எழுந்தது முதல் இரவு  தூங்குவரையிலும் தங்களின் அன்றாட நிகழ்வுகளை `செல்பி` எடுத்து பேஸ்புக், டிவிட்டர்,  இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளும்,  ஷேர்களும் வாங்குவதை ஸ்மார்ட் போன் வாசிகள் பெருமையாகக் கருதுகிறார்கள்.  உலகின் முதல் செல்பி 1850லேயே எடுக்கப்பட்டு விட்டது. புகைப்படக்கலையின் தந்தை  என்று சொல்லப்படும் ஸ்வீடனைச் சேர்ந்த ஆஸ்கர் ரெஜ்லாண்டர்தான் இதை எடுத்ததார்.  செல்போன், பேசுவதற்கு என்ற நிலைமாறி, செல்பி எடுப்பதற்கு என்ற நிலை வந்துவிட்டது.
இதற்காக தரமான முன்பக்க கேமிரா அமைக்கப்பட்ட மொபைல்கள் தற்போது விற்பனைக்கு  வரத் தொடங்கியுள்ளன.

செல்பிக்கு சாதாரண பிரஜைகள் முதற்கொண்டு நாட்டின் பிரதமர், ஜனாதிபதி, நடிகர்கள்,  விளையாட்டு வீரர்கள் என சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அடிமையாகிவிட்ட  நிலையை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்தப் பெருமைக்குப்  பின்னால் ஒளிந்துகிடக்கும் உண்மைகள் அதிரவைப்பதாக உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்பெயின் நாட்டின் பழைமையான பாலத்திலிருந்து  தொங்கியபடி `செல்பி` எடுக்க ஆசைப்பட்ட இளம் மருத்துவ மாணவி  ரேச்சல்,பாலத்திலிருந்து விழுந்து உடல் நொறுங்கி பரிதாபமாக பலியானார். அதே போல இங்கிலாந்து நாட்டின்,  கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்  கெரீத் ஜோன்ஸ், 90 அடி  உயரமான  மலையுச்சியில் நின்றபடி `செல்பி` எடுக்க முயன்று, மலையுச்சியில் இருந்து   விழுந்து இறந்தார்.    selfie (11)

அண்மையில், ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் துப்பாக்கியை ஒரு கையில் வைத்துக் கொண்டு  மற்றொரு கையால் செல்போன் மூலம் செல்பி எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக  டிரிக்கரை அழுத்தியதால் துப்பாக்கி குண்டு தலையில் பட்டு பரிதாபமாகப்  பலியானார்.

இப்படி நிறைய சம்பவங்கள் அடிக்கடி நிகழத்தான் செய்கின்றன. ஆனால் செல்பி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சமூக வலைத்தளங்களில்  நாள்தோறும் செல்பிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இப்படி செல்பி மோகம் பிடித்து  அலைவது ஒரு வித மன நோய் என்று அதிர்ச்சி தருகிறார்கள் அமெரிக்க மனநல  மருத்துவர்கள். அதே நேரத்தில் அதிலிருந்து விடுபடவேண்டும் என்றும்  வலியுறுத்துகிறார்கள்.

ஒருகட்டத்தில் மொபைல் போன் மூலமும், கேமிரா மூலமும் தன்னைத் தானே, ‘செல்பி’ படம்  எடுத்து, சமூக வலைத்தளங்களில் அதைப் பதிவேற்றம் செய்வது, இளைஞர்களிடம் பொழுது  போக்காக இருந்தது. இது தற்போது, அவர்களின் `முழுநேர பணி` யாகவே  மாறிவிட்டது. இது புதுவகையான மனநோய்தான் என்று கண்டறிந்துள்ள  அமெரிக்க மனநல  மருத்துவர்கள், இதை மூன்று வகையாகவும் பிரித்து உள்ளனர்.

1. தினமும் மூன்று முறை, ‘செல்பி’ படம் எடுப்பது; அதை சமூக வலைதளங்களில்  பதிவிடாதது ஆரம்ப மன நிலை.

2. தினமும் மூன்று முறை படம் எடுத்து, அதை சமூக வலை தளங்களில் தவறாமல்

பதிவிடுவது  இரண்டாம் நிலை.

3. எப்போதும் எதைப் பார்த்தாலும்  ‘செல்பி’ படம் எடுத்து உடனுக்குடன் சமூக

வலைதளங்களுக்கு அனுப்புவதை  அன்றாட செயலாகக் கருதுவது மூன்றாவது நிலை.  இதுதான் ‘செல்பி’ மோகம் முற்றி, மன நோயாளியாக  மாறும் நிலை என்று எச்சரிக்கிறார்கள்  மனநல மருத்துவர்கள். அதனால் செல்பி மோகத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு ஸ்மார்ட்  போன் வாசிகளை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்

அமெரிக்காவில்; ஓஹியோ மாகாண பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் செல்பி  புகைப்படத்திற்கு அடிமையானவர்கள் சுயநலக்காரர்களாகவும், உணர்ச்சி  வசப்பட்டவர்களாகவும் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. 18 முதல் 40 வயதிற்குட்பட்ட  800 பேரின் சமூக வலைதள செயல்பாடுகளை வைத்தும், ஆளுமைப் பண்புகளை

நிறுவுவதற்கான உளவியல் கேள்விகளுக்கு பதில் எழுதச்செய்தும் ஆராய்ச்சியாளர்கள்  ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆய்வு குறித்து பேராசிரியர் ஃபாக்ஸ் கூறுகையில், செல்பி எடுப்பவர்கள் சுய மோகம்  கொண்டவர்கள் என்பது சாதாரண விஷயம் தான். ஆனால் ஆச்சர்யமான விஷயம்  என்னவென்றால் அவர்கள் சராசரியை விட அதிகமான சமூக விரோத பண்புகளை  கொண்டிருப்பதும், தன்னை காட்சி பொருள் போன்று பார்ப்பதும் தான் என்றார். மேலும் இது போன்ற நடவடிக்கைகள் அதிக பிரச்சனைகளை உண்டாக்கும் என்று எச்சரித்துள்ளார்.

இதனால் ‘செல்பி’ மோகம் முற்றி, மன நோயாளியாக  மாறும் நிலை உருவாகும் என்று  எச்சரிக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். அதனால் செல்பி மோகத்தைக்  குறைத்துக்கொள்ளுமாறு ஸ்மார்ட் போன் வாசிகளை மருத்துவர்கள்
வலியுறுத்துகிறார்கள்.

தொகுப்பு: எஸ்.நுஷ்ரத் ஜஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here