கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலகத் தலைவiர் ஒருவரை கொலை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களுடன் பாதாள உலக நபர் ஒருவரை நீர்கொழும்பு சட்டத்தை நிலைநிறுத்தும் பிரிவு பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
மினுவாங்கொட ஹீனஹிட்டியான பிரதேசத்தைச் சேர்ந்த ரத்தரன் ஹன்தி சுதேஸ் தேவந்த (30 வயது) என்பவரே கைது செய்யப்பட்ட சந்தேக நபராவார்.
நீர்கொழும்பு சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் கலஹு கொடவிட்ட என்ற பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து ஆயுதங்கனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு, ரி 56 ரக துப்பாக்கியின் பகுதி ஒன்று, ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகள் 263, ரைபர் ரவைகள் 25, ரி 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் மெகஸின் ஒன்று, உட்பட மேலும் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
மினுவாங்கொட ஹீனஹிட்டியான பிரதேசத்தைச் சேர்ந்த ரத்தரன் ஹன்தி சுதேஸ் தேவந்த (30 வயது) என்பவரை முதலில் கைது செய்த பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலகத் தலைவரான பொடி சாகரவை கொலை செய்வதற்காக கொண்டு வரப்பட்டு சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் இவை என தெரிய வந்துள்ளது இந்த ஆயுதங்களை இராணுவத்தில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவரிடமிருந்து பல தடைவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன
சந்தேக நபரான இராணுவ வீரர் தற்போது தலைமறைவாகியுள்ளார்
அவரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின் வழிகாட்டலில் சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர, பொலிஸ் பரிசோதகர்களான எம். ரஹுப், எச்.எம்.சந்தன, தர்மப்பிரிய, கான்ஸ்டபிள்களான அமல், ஜயசிங்க, சிந்தக , சமித் ஜயசேகர ஆகியோர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கட்டுநாயக்கா பொலிஸாலிடம் ஒப்படைத்து மினுவாங்கொட நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்