இன்று உலக சனத் தொகை தினம்

0
834

Ethic_Dong_Liping_Guizhou_China

உலக சனத் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் திகதி உலகளாவிய
ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு
முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.
“பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுத்தல்; பெண்களுக்காக நிதியீடு செய்வது ஏன்
என்பது மிகச் சிறந்த தெரிவு’ என்பது இவ்வாண்டின் தொனிப் பொருளென ஐ.நா. சனத்
தொகை நிதியம்(UNFPA) பிரகடனப்படுத்தியுள்ளது.பிறப்பு மற்றும் இறப்பு வீதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தொகை.

கி.மு.4000 வருடங்களுக்கு முன்பிருந்தே சனத்தொகை கணக்கெடுப்பு
மேற்கொள்ளப்பட்டதாக வரலாறு தெரிவிக்கின்றது. 1987ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி
உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை
உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 1987 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11 ஆம் திகதியை (World
Population Day, recognized by the UN ) உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. 1989 முதல் இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மக்கள் தொகை
பெருக்கத்தின் தீமைகளையும், சிறுகுடும்ப நெறியின் நன்மைகளையும் எடுத்துரைப்பது
இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். மத்திய கிழக்கிலுள்ள பெபிலோனியாவில் மக்களின்
வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு சனத்தொகை மதிப்பீடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதுவே உலகின் முதலாவது கனத்தொகை கணக்கெடுப்பாகும்.
இன்று உலகில் ஒவ்வொரு நாட்டிலும் சனத்தொகை கணக்கெடுப்பு மிக முக்கியமானதாகக்
கருதப்படுகின்றது. ஏனெனில், ஒரு நாட்டில் வாழும் சனத்தொகையின் மதிப்பீட்டை
அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் அந்நாட்டின் அபிவிருத்தி, உற்பத்தி போன்ற

துறைகளில் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உலக சனத்தொகை அதிகரிப்பானது, மக்களின் சமூக, பொருளாதார துறையில் பாரிய
தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மக்களின் ஆரோக்கிய வாழ்வு,
குடும்பநெறியுடன் கூடிய உயர் மனித விழுமியங்கள், சமூகச்சீர்கேடுகள்
போன்றவற்றில்கூட பல்வேறுபட்ட பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. நவீன காலத்தில்
மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள அபிரிமிதமான முன்னேற்றம், சனத்தொகை
அதிகரிப்பிற்கு பிரதான காரணமாகும். அத்துடன், இயற்கைப் பேரழிவுகள் மற்றும்

அனர்த்தங்களைக் கட்டுப்படுத்துவதில் முன்பைவிட தற்பொழுது ஏற்பட்டுள்ள
முன்னேற்றம், தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதில் கிடைத்த வெற்றி
போன்றவையும் சனத்தொகை அதிகரிப்பிற்கான பிரதான காரணங்களாகக் கொள்ளலாம்.

கடிகார (World Population Clock) மதிப்பீட்டின் படி 2009 ஜூலை 10 ம் தேதி உலகின் மக்கள் தொகை 6,770,073,396 (00:51 GMT (EST+5) Jul 10, 2009) அதாவது 677 கோடியாகும்.
சராசரியாக உலக மக்கள் தொகை நிமிடத்திற்கு 150 பேர், மணிக்கு 9000 பேர், நாளைக்கு
2,160,000 பேர் என்ற வேகத்தில் அதிகரித்து வருவதாக மதிப்பீட்டின் பிரகாரம்
கூறப்படுகின்றது.

உலக சனத்தொகையில் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ்
ஆகியன கூடிய சனத்தொகைக் கொண்ட நாடுகளாக இருப்பதை அவதானிக்கலாம்.
2009ஆம் ஆண்டு ஜுலை 05ம் திகதியின் மதிப்பீட்டின் பிரகாரம் இப்பட்டியலில் இலங்கை
56ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கை சமூகக் குறிகாட்டிகள் பலவற்றில் மாறுபட்ட போக்கைக் கொண்ட நாடாக
விளங்குகின்றது. இங்கு வருடாந்த இயற்கை அதிகரிப்பு வீதம் 1.1 ஆகவும், பிறப்புவீதம்
1000 பேருக்கு 17.9 வீதமாகவும், இறப்பு வீதம் 1000 பேருக்கு 6.6 வீதமாகவும்
காணப்படுகின்றது.

இலங்கையின் 2001 ஆம் ஆண்டு குடித்தொகை கடிகாரத்தின் பிரகாரம் 18,797,257
தொகையாகவும், 2007 ஆம் ஆண்டில் 20,010,000 தொகையாகவும் இருந்த குடித்தொகை
தற்பொழுது 2009ஆம் ஆண்டு மதிப்பின் படி 21,128,772 தொகையாக

உயர்வடைந்துள்ளது. இங்கு ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 71 வயதாகவும், பெண்களின்
சராசரி ஆயுட்காலம் 78 வயதாகவும் காணப்படுகின்றது.
இலங்கையின் சராசரிக் குடித்தொகை வீதத்தினை நோக்கும் போது, 1995 முதல் 2000
ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 1.37 வீதமாக இருந்த வளர்ச்சி வீதம் அண்மைய

தரவுகளின் படி 1.1 வீதமாகக் குறைவடைந்துள்ளது. இது 2050 ஆண்டில் 0.45 வீதமாக
மேலும் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் தற்பொழுது வளர்ச்சியடைந்து வரும் குடித்தொகையானது,
குடித்தொகைக் கடிகாரத்தின் 2009 ஆண்டு கணிப்பின் படி, குடித்தொகை வளர்ச்சி
வீதமானது 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582
வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910
தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றது.  எனினும் 2050 ஆம் ஆண்டில், குடித்தொகை
வளர்ச்சி 0.5 வீதமாக குறைவடைகின்ற பொழுதிலும், உலக சனத்தொகையானது 900
கோடியாக பதிவாகும் என அமெரிக்க குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகம்
தெரிவித்துள்ளது.
China has 1bn mobile subscriptions
குடித்தொகையானது இதே வேகத்தில் வளர்ந்து கொண்டு செல்லுமாயின் 2075 ஆம்
ஆண்டில் 1000 கோடியாகவும் 2200 ஆம் ஆண்டில் 1,200 கோடியாகவும் உயரும் என
குடித்தொகை வளர்ச்சி தொடர்பான அறிக்கைகள் பலவற்றில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் வனவளம் அருகி, மண் அரிப்பு பெருகி சுற்றுச்சூழல்
சீர்கெடுகிறது. கான்கிரீட் காடுகளின் வளர்ச்சியால் பயிர் காடுகளுக்கான நிலப்பரப்பு
குறைந்து வருகிறது. கிராம மக்கள் பிழைப்புக்காக நகரத்தை நோக்கி ஓடுகிறார்கள். அங்கே
குடிசைகள் பெருகி சுற்றுச் சூழல் சீர் கெடுகிறது. குடிநீர்ப் பற்றாக்குறை, மின்சாரப்

பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், மருத்துவமனைகளில் கூட்டம், பள்ளிக்கூடங்களில்
இடமின்மை, போன்ற பல்வேறு பிரச்சனைகளால் நகரங்கள் நரகங்களாகின்றன.
மேற்குறிப்பிட்ட அடிப்படையில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படக் கூடிய

பிரச்சினைகளை நேரடியாக நோக்குவோம். அவை அடிப்படையில் உணவுப் பிரச்சினை,
தொழில் பிரச்சினை, வதிவிடப் பிரச்சினை என வகுக்கலாம். கல்வி வசதி, மருத்துவ வசதி,
சுகாதார வசதி, போக்குவரத்து வசதி முதலிய சமூக நலச் சேவைகளை நிறைவேற்றுவதில்
ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளென பல குடித்தொகை பிரச்சினைகள்

தலைதூக்கியிருக்கின்றன. இவற்றினால் அதிகளவில் பாதிக்கப்படுவன
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளே.

குடிசனப் பெருக்கத்தினால் இன்றைய உலகம் எதிர்நோக்கும்  இன்னுமோர் முக்கியமான
பிரச்சினை உணவுப் பிரச்சினையாகும். அதிகரித்துவிட்ட மக்களுக்கு போதிய
உணவுமில்லை. ஊட்டமான உணவுமில்லை. உலகில் மக்கள் தொகை மூன்றிலொரு
பங்கினர் உணவுப் பற்றாக்குறையினால் தவிக்கின்றனர். மூன்றிலொரு பங்கினருக்கு
மாத்திரமே போதுமானளவு உணவு கிடைக்கின்றது. பூமியில் உள்ள வளங்கள் 200
கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்தின் பாதிப்பு அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் பார்க்க
அபிவிருத்தியடையாத நாடுகளிலே அதிகமாகக் காணப்படுகின்றன. காரணம் உலக வளத்தில்
80 சதவீதத்தை வைத்திருக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகளான செல்வந்த நாடுகளில் உள்ள
மக்கள் தொகை வெறும் 20 சதவீதம்தான். மாறாக வெறும் 20 சதவீத வளத்தைக்
ண்டிருக்கும் அபிவிருத்தியடையாத நாடுகளான ஏழை நாடுகளில் உள்ள மக்கள்
தொகையோ 80 சதவீதம்.
அறியப்பட்ட வளங்களை கணக்கில் கொண்டு உலக மக்கள் தொகை மிகையாக (Over
Population) கருதப்படுகிறது. ஆனால் நாளைய தினம் மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப
வளர்ச்சியால் இயற்கையின் இரகசியங்கள், முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு புதுப்புது
வளங்கள் கண்டறியப்படுமானால் இருக்கும் இந்த மக்கள் தொகை குறைவானதாக (Under
population) கருதப்படும் நிலை ஏற்படக்கூடும்.

அதிக சனத்தொகையுடைய 10 நாடுகள்

01. மக்கள் சீனக் குடியரசு – 1,393,000,000

02. இந்தியா – 1,267,000,000

03. ஐக்கிய அமெரிக்கா – 322,563,000

04. இந்தோனேசியா – 252,780,000

05. பிரேசில் – 202,020,000

06. பாகிஸ்தான் – 195,109,000

07. நைஜீரியா – 178,478,000

08. பங்களாதேஸ் – 158,497,000

09. ரஸ்யா – 142,470,290

10. ஜப்பான் – 127,630,000

மிக குறைந்த சனத்தொகையுடைய 10 நாடுகள்

01. பிட்கேர்ன் தீவுகள் – 67

02. வத்திகான் – 500

03. டொகேலோ – 1,212

04. நியூ – 2,166

05. ஃபோக்லண்ட் தீவு – 3,300

06. சென்ஹெலெனா – 4,900

07. மொன்செரட் – 6,000

08. டுவலு – 11,992

09. நாவுறு – 13,528

10. எங்கில்லா – 15,410

தொகுப்பு: எஸ்.நுஷ்ரத் ஜஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here