இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அணியினர் வருடாந்தம் நடத்தும் கண்காட்சி இன்று சனிக்கிழமை (10-9-2016) நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலின் ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய பெண்கள் அணியினரின் தலைவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுமியரின் கைவினைப் பொருட்கள், அல்குர்ஆனின் சிங்கள மொழிப் பெயர்ப்பு மற்றும் இலங்கை அஹ்மதியா ஜமாஅத்தின் வரலாறு தொடர்பான விடயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பல்வேறு வகையான உணவுப் பொருட்கள், ஆடை வகைகள் உட்பட பல்வேறு வகையான பொருட்;கள் விற்பணைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதில் இலங்கையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் பாகிஸ்தானிய பெண்கள் பலர் பங்குபற்றியதுடன் அவர்களினால் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானிய உணவுப் பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
படம்: கண்காட்சியில் வைக்கப்பட்ட பொருட்களையும் ஆண்கள் அதனை பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.
(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)