இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் மூத்தோர் அணியினரின் (மஸ்லிஸ் அன்சாருல்லா) வருடாந்த தேசிய மாநாடு (இஜ்திமா) நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.
மூத்தோர் அணியினரின் தலைவர் கே. ஏ. சபீயுல்லாஹ் சாகிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இஸ்லாமிய வினா விடைப் போட்டி, உர்து நஸம் போட்டிகள், குர்ஆன் ஆயத்துக்களை ஓதும் போட்டி, ஞாபக சக்தியை அளவிடும் போட்டி உட்பட பல போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன் பல்வேறு தலைப்புக்களிலும் விசேட உரைகள் இடம்பெற்றன.
நிகழ்வில் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் ஏ.எச். நாசிர் அஹ்மத் சாகிப் , மௌலவிமார்கள் மற்றும் நாடெங்கிலுமிருந்து வருகைத் தந்தோர் பங்குபற்றினர்.
தேசிய மாநாட்டை முன்னிட்டு சனிக்கிழமை (23) கரப்பந்தாட்டம் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மத்தியில் (மூத்தோர் அணி) நடைபெற்றன.
மாநாட்டின் இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.