சமுதாய வலைதளம் ஆகும். அண்மையில் பிப்ரவரி 4ல்இ சமூக இணைய தளமான பேஸ்புக் தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியது. ஹார்வேர்ட் பல்கலையில் சிறிய அளவில் தொடங்கி இன்று நூறு கோடிக்கும் மேலாக வாடிக்கையாளர்களைக் கொண்ட அசுர சமூக இணைய தளமாக
இயங்கும் பேஸ்புக் சரித்திரம் நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. அந்த வகையில் பேஸ்புக் பற்றி நீங்கள் அறிந்திராத பல அரிய தகவல்களை குறிப்பிடவுள்ளேன்.
இந்த உலகில் உள்ள 10 ல் இருவருக்கு பேஸ்புக் அக்கவுன்ட் இருக்கிறது. இணையம்
பயன்படுத்துவோரில் 80 சதவிகித மக்களுக்கு பேஸ்புக் அக்கவுன்ட் உள்ளது. 80 சதவிகித இந்திய இளைஞர்கள் பேஸ்புக்கில் இருக்கிறார்கள். மேலும் 30 சதவிகிதம் பேர் பேஸ்புக்கில்
இருப்பவர்களில் 35 வயதிற்கு மேல் இருப்பவர்கள். இதில் உள்ள மொத்த யூஸர்ஸின்
சதவிகிதப்படி ஒவ்வொரு யூஸர்ஸூம் 220 பிரெண்ட்ஸ் வைத்துள்ளனர். அத்துடன் ஒட்டுமொத்த பேஸ்புக் பயன்பாட்டில் 22 சதவிகிதம் அமெரிக்கர்கள் தான்.
ஒரு நிமிடத்தில் இதில் 10 லட்சம் லிங்குகள் ஷேர் செய்யப்படுகின்றன, 3 மில்லியன் ஸ்டேட்டஸ் ஆப்டேட் பதியப்படுகின்றன, 8 லட்சம் பேஜ் இன்வைட்ஸ் அனுப்பப்படுகின்றன, 30 இலட்சம் போட்டோக்கள் tag செய்யப்படுகின்றன. 30 இலட்சம் பிரெண்ட் reaquests அனுப்பப்படுகின்றது.
ஒரு மாதத்தில் சுமார் 900 பில்லியன் நிமிடங்கள் இதில் உள்ள மக்களால் பேஸ்புக்
பயன்படுத்தப்படுகிறது. ஒரு யூஸர் ஒரு மாதத்தில் 90 ஸ்டேட்டஸ் அல்லது போட்டக்களை ஷேர் செய்கிறார்.
இதுவரை அதில் 70 வகையான மொழிகள் பேஸ்புக்கில் உள்ளது.
தினந்தோறும் 5 இலட்சம் யூஸர்கள் இதிலிருக்கும் translation ஆப்ளிகேஷனை
பயன்படுத்துகின்றனர். தினந்தோறும் இதில் 3 கோடி புதிய அப்ளிகேஷன்கள் ஏற்றப்படுகின்றது.
50 பில்லியன் அளவுக்கு இதில் தினந்தோறும் photoes மற்றும் ஸ்டேட்டஸ் போடப்படுகின்றது. 70 சதவிகித பேஸ்புக் யூஸர்ஸ் தினமும் லாக் இன் செய்கிறார்கள். இதை தினசரி மொபைல் மூலம்
பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 250 மில்லியன் ஆகும்
Social plugins ஏப்ரல் 2010 இல் தொடங்கப்பட்டது முதல் 10000 புதிய வலைத்தளங்களில்
சராசரியாக ஒவ்வொரு நாளும் பேஸ்புக் ஒருங்கிணைக்கப்படுகின்றது. மேலும் உலகளாவிய
முதல் 100 வலைத்தளங்களில் பாதிக்கும் மேற்பட்டது பேஸ்புக்கிற்கு உட்பட்டது. இதுவரை
உலகில் 200 மொபைல் ஆப்ரேட்டர்ஸ் நிறுவனங்கள் பேஸ்புக்குடன் கூட்டு வைத்துள்ளது.
அத்தடன் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் ஒரு பேஸ்புக் ஊழியர் வேலை விட்டு
வெளியே வந்தால் அவருக்கு eBay 10 இலட்சம் ரூபாய் மாத சம்பளத்தில் வேலை தர தயாராக
இருக்கின்றது.