கையெழுத்து வேட்டையும் துண்டுப்பிரசுர விநியோகமும்

0
181
article_1466931647-bbbbbbbbbbbbb
-எம்.இஸட்.ஷாஜஹான்

ஊடகவியலாளர் பிரடி கமகேயை தாக்கிய சம்பவம் தொடர்புடைய  நீர்கொழும்பு பிரதி மேயர் தயான் லான்ஸாவை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நேற்று சனிக்கிழமை(25) மாலை நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாக கையெழுத்து வேட்டையும் துண்டுப்பிரசுர விநியோகமும் இடம்பெற்றன.

இதனை ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவும் நீர்கொழும்பு ஊடகவியலாளர் ஒன்றியமும் இணைந்து  ஏற்பாடு செய்திருந்தது.

மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு அமைப்பாளருமான ரொயிஸ் பெர்ணான்டோ, நீர்கொழும்பு  மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான வைத்தியர் ஹென்ரி ரொஸைரோ, கிஹான் பெர்ணான்டோ, சங்கீத் பெர்ணான்டோ, பிரதேச ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன், தாக்குதல் சம்பவத்தை விளக்கியும்  சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சகலரையும் கைது செய்யுமாறு வலியுறுத்தியும் ஊடக சுதந்திரத்தை நிலை நிறுத்துமாறு கோரியும் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

– See more at: http://www.tamilmirror.lk/175593/%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AE-#sthash.6dVg8Pgx.dpuf

http://www.tamilmirror.lk/175593/%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AE-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here