சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்த வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம்

0
126

 கடந்த ஆண்டு நடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில்  சித்தியடைந்து உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ள  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில்  வெள்ளிக்கிழமை  (15-5-2015) நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர்களான ஜெகநாதன், எம். ஏ. சில்வா, காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தனர்.

ஆசிரிய ஆலோசகர் ஜெகநாதன்  மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர்  சிறப்பான சித்திகளைப் பெற்ற மாணவிகளான ஆர். கலைவதனி  , ஆர். தருஷிகா ஆகியோருக்கு பதக்கம் அணிவித்தும் பரிசில் வழங்கியும் கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் ஆசிரியர்களின் உரைகளும் இடம்பெற்றன.

DSC07915 Darsini DSC07930 DSC07930 kalai Vathani DSC07921

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here