தேசிய கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் ஊடகவியலாளர் ஷாஜஹனுக்கு கல்வி முதுமாணி பட்டம்

0
381

20150326_114449கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்   வியாழக்கிழமை (26-3-2015)  நடைபெற்ற தேசிய கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் இலங்கை அதிபர் சேவையை சேர்ந்தவரும், ஊடகவியலாளரும்  கவிஞரும் எழுத்தாளருமான எம்.இஸட்.ஷாஜஹான் கல்வி முதுமாணி  பட்டம் பெற்றார்.

வீரகேசரி , மெட்ரோ நிவ்ஸ், விடிவெள்ளி, மாலை எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகளின் நீர்கொழும்பு நிருபராக பணியாற்றும்  இவர், கலாநெஞ்சன் ஷாஜஹன் என்ற பெயரில்  கவிதை ,  கட்டுரை, சிறுகதைகள் எழுதி வருபவராவார். இவர் இரண்டு கவிதைத் தொகுதிகளையும் , இஸ்லாமியப் பாடல் தொகுதிகள் இரண்டினையும் வெளியிட்டுள்ளதோடு, பல்வேறு இலக்கியப் போட்டிகளில் தேசிய ரீதியில் பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

கல்விமாணி பட்டம் (தேசிய கல்வி  நிருவகம்), இதழியல் துறையில்  டிப்ளோமா (கொழும்பு பல்கலைகழகம்), மனித உரிமைகள் தொடர்பான டிப்ளோமா, கணனித் துறையில் டிப்ளோமா என்பவற்றையும் ஜனாப் எம். இஸட். ஷாஜஹான் ஏற்கனவே பெற்றுள்ளார். அத்துடன் இவர் சமாதான நீதவானாகவும் உள்ளார்.

கொழும்பு ஹமீத் ஹல் ஹுசைனி தேசியக் கல்லூரி. மருதானை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான  ஜனாப் ஷாஜஹான் இலக்கியம் மற்றும் சமூக சேவை பங்களிப்புக்காக ‘சாமஸ்ரீ தேச கீர்த்தி’ ‘கவியத் தீபம்’, ‘காவிய பிரதீப’ ஆகிய பட்டங்கள் வழங்கி  கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்   வியாழக்கிழமை (26-3-2015)  நடைபெற்ற தேசிய கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் இலங்கை அதிபர் சேவையை சேர்ந்தவரும், ஊடகவியலாளரும்  கவிஞரும் எழுத்தாளருமான எம்.இஸட்.ஷாஜஹான் கல்வி முதுமாணி  பட்டம் பெற்றார்.

வீரகேசரி , மெட்ரோ நிவ்ஸ், விடிவெள்ளி, மாலை எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகளின் நீர்கொழும்பு நிருபராக பணியாற்றும்  இவர், கலாநெஞ்சன் ஷாஜஹன் என்ற பெயரில்  கவிதை ,  கட்டுரை, சிறுகதைகள் எழுதி வருபவராவார். இவர் இரண்டு கவிதைத் தொகுதிகளையும் , இஸ்லாமியப் பாடல் தொகுதிகள் இரண்டினையும் வெளியிட்டுள்ளதோடு, பல்வேறு இலக்கியப் போட்டிகளில் தேசிய ரீதியில் பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

கல்விமாணி பட்டம் (தேசிய கல்வி  நிருவகம்), இதழியல் துறையில்  டிப்ளோமா (கொழும்பு பல்கலைகழகம்), மனித உரிமைகள் தொடர்பான டிப்ளோமா, கணனித் துறையில் டிப்ளோமா என்பவற்றையும் ஜனாப் எம். இஸட். ஷாஜஹான் ஏற்கனவே பெற்றுள்ளார். அத்துடன் இவர் சமாதான நீதவானாகவும் உள்ளார்.

கொழும்பு ஹமீத் ஹல் ஹுசைனி தேசியக் கல்லூரி. மருதானை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான  ஜனாப் ஷாஜஹான் இலக்கியம் மற்றும் சமூக சேவை பங்களிப்புக்காக ‘சாமஸ்ரீ தேச கீர்த்தி’ ‘கவியத் தீபம்’, ‘காவிய பிரதீப’ ஆகிய பட்டங்கள் வழங்கி  கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here