நீர்கொழும்பில் இந்துக் கோயில்களும் தோற்றமும்

0
235

மேற்கில் கடலும் கடல் சார்ந்த நிலமும் கிழக்கில் முல்லை நிலம் வரையும் வடக்கில் மகா ஓயாவும் தெற்கே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையமும் அதனை அண்டிய நிலப் பரப்புகளையும் எல்லைகளாகக் கொண்ட நீர்கொழும்பு நகரின் இந்துக் கோயில்கள் பற்றியும் தோற்றம் பற்றியும் பார்ப்போம்.

எந்தவொரு வணங்குந் தலம் உருவாகவும் அதுசார்ந்த சமயத்தவர்கள் இருக்க வேண்டும். நீர்கொழும்பில் பௌத்தம், கிறிஸ்தவம், சைவம் (இந்து சமயம்), இஸ்லாம் ஆகிய சமயங்களைப் பேணும் பல்லின மக்களும் சமாதானமாக வாழுகின்றனர். இந்துக்கள் நீர்கொழும்பு பூராவும் பரந்தும் செறிந்தும் வாழுகின்றனர். ஆனாலும் இவர்கள் செறிந்து வாழும் பகுதியை ஊடறுத்துச் செல்லும் கடற்கரைத் தெருவிலே மாத்திரம் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் அருள்மிகு ஸ்ரீ சிங்கமாகாளி அம்பாள் தேவஸ்தானம், ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் ஆகிய இந்துக் கோயில்களைக் குறிப்பிடலாம். இக்கோவில்களமைந்த அதே வீதியில் கிறிஸ்தவ தேவாலயங்களும் முஸ்லிம் பள்ளிவாசல்களும் காணப்படுகின்றன. அவரவர் சமயக் கடமைகளை சமரசமாக அமைதியாக நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

மேற்கூறிய கோயில்கள் சமய பண்பாடுகளை வளர்க்கும் தமிழ்ச் சமூக விழுமியங்களைப் பேணும் கல்வி, கலை, கலாச்சார, சமய அபிவிருத்திக்கான வழிகாட்டல்கள் வழங்கும் கேந்திர ஸ்தானங்களாக விளங்குகின்றன. இச்சமூக அபிவிருத்திக்கான முக்கியஸ்தர்களாக கோயில்கள், கலைக் கூடங்களின் பரிபாலகர்களே விளங்குகின்றனர்.

விநாயகர் ஆலயம் :

இந்துக் கோயில்களின் தோற்றம் பற்றிய பல வரலாறுகள் காணப்படுகின்றன. 1754ஆம் வருடம் மார்கழி 23ஆந் திகதி சைவப் பெரியார் வெ. அருணாசல செட்டியார் தனது சகோதரரான வெ. குழந்தைவேல் செட்டியாருடன் சேர்ந்து தமக்குச் சொந்தமான காணியில் ஒரு விநாயகர் ஆலயத்தினைத் தோற்றுவித்துள்ளார். அடியார் கூடக்கூட அருணாச்சல செட்டியார் மேலும் இக்கோயிலைபபெருப்பித்துள்ளார். மேலும் ஆகமவேத அறிவு மிகுந்த அர்ச்சகரை நியமித்து வேதாகமம் வளர்த்துள்ளார். சகோதரர்கள் இருவரும் மறைந்ததும் இருவரது துணைவிகளும் மகள் தைலம்மாவும் கோயில் பாலனத்தை மேற்கொண்டு வந்துள்ளனர். இவர்களுக்கும் முடியாமை முதுமையில் முதிர 1880.10.23ல் கோயில் பரிபாலனம் ஒரு சபையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இவ்வாறு தனியுடைமை மக்கள் உடைமையானது.

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில்:

ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் நீர்கொழும்பு கடற்கரைத் தெருவிலே விக்கிரகம் செய்யும் தொழில் புரியும் விஸ்வ பிரம குலத்தவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் வழிபட கிராம சேவகர் அனுமதியோடு ஓர் ஆலயத்தினை அமைப்பதற்குக் காட்டிய இடத்தில் ஒரு வேப்ப மரத்தை அடையாளமாக வைத்து அதன்கீழ் சூலாயுதம் நாட்டி வழிபட்டுள்ளனர். காலப்போக்கில் அம்மன் சிலையை வைத்து வழிபட்டுள்ளனர்.

இக்கோயில் பற்றிய சிறப்புக் கதை ஒன்று இவ்வாறு கூறப்படுகிறது. அதாவது மேற்படி கோயில் நிலத்தில் செட்டியார் கல்லால் கட்டமுன் அந்நிலத்தில் ஒரு சமாதி இருந்ததாம். அது ஒரு சிறுகுழந்தை அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு இறந்ததாம். அதனை வேப்ப மரத்தினடியில் அடக்கம் செய்து ஒரு சமாதியும் கட்டினார்களாம். காலப்போக்கில் மறைந்து போயுள்ளதாம். அச்சமாதி இன்றும் மக்கள் அம்மை நோய் ஏற்பட்டு விட்டால் இவ்வாலயத்து அம்பாளின் திருநீறு வேப்பிலை தீர்த்தம் முதலியவைகளைப் பெற்று நோய் நிவாரணம் பெறுகின்றார்களாம்.

இவ்வாலயத் தோற்றப்பாடு குறித்த பழங்கதைகள் இவ்வாறிருக்க, இன்று பழைமை வாய்ந்ததும் சிறப்பும் சக்தியும் மிகுந்து காணப்படுவது நீர்கொழும்பு முத்து மாரியம்மன் கோயிலாகும்.

ஸ்ரீ சிங்க மகாகாளியம்மன் ஆலயம்:

இது நூறு வருடங்கள் பழைமை வாய்ந்தது. ஸ்ரீமான் வேலாயுதச் செட்டியார் காப்பாளராலும் தர்மகர்த்தாக்கள் ஐவராலும் இயங்கியுள்ளது. இப்பொழுதும் அம்பாள் அடியார்களின் அல்லல் போக்கும் ஆலயமாக விளங்குகிறது.

காமாட்சியம்மன் தேவாலயம் ஒன்று காமச்சோடையில் இருந்து மறைந்துள்ளது என்பதும், அதற்கடையாளமாக காமச்சோடையில் ஆலமரத்தினடியில் மேடையமைத்து விளக்கேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு அந்நிய மொழியிலிது பற்றிய தகவல் கண்டேன். அதாவது காமாட்சி நீர்கொழும்பு (தற்போது கடல் கொண்ட மைல் தூரப்பரப்பு உட்பட) கரைப் பிரதேசத்தை ஆண்டவள் என்றும் இராவணனின் இன்னொரு தங்கையென்றும் காமாட்சி விஷ்ணுவின் மனைவியென்றும், காமாட்சி மாளிகை ஆலயம் ஓடை முதலானவை அழிந்து மறைந்துள்ளதென்றும் பதிவாகி உள்ளன.

kam
Baddra kali amman kovil / negombo

 

Gana-devi-kovil
muthumari amman kovil

Muthumari amman kovil

  Dilshan Thisera