நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்திற்கு இரண்டு சங்கங்கள் உதவி

0
558

unnamed (20) unnamed (16) unnamed (11)(1) unnamed (4) unnamed (6) unnamed (17)

unnamed(4) unnamed (1)(3) unnamed (3)(3) unnamed (2)(3)

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்திற்கு நீர்கொழும்பு தமிழர் நலன்புரிச் சங்கம் மற்றும் விவேகானந்த நலன்புரி நிலையம்  என்பன பாடசாலைக்கு தேவையான தளபாடங்கள், இலத்திரனியல் உபகரணங்கள், அலுவலக   மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பவற்றை வழங்கி உதவி புரிந்துள்ளன.

ஊதவி வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (15-6-2015) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் நீர்கொழும்பு வலய தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு பொறுப்பான உதவிப் பணிப்பாளர் மஹ்பூப் மரிக்கார், ஆசிரிய ஆலோசகர் ரிஸிஹரன், தமிழர் நலன்புரிச் சங்கத்தின் முக்கியஸ்த்தர்களான எம். ஏகாம்பரம், ஆனந்த சிவம், எம்.நடராஜா, விவேகானந்த நலன்புரி நிலையத்தின் முக்கியஸ்தர்களான  நவரட்ன ராஜா, லோகேஸ்வரன் அனுர  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

விவேகானந்த நலன்புரி நிலையம் பாடசாலையின் பெயர் பலகை , மாணவர் தலைவர்களுக்கான சின்னங்கள் என்பவற்றை பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்தது. நீர்கொழும்பு தமிழர் நலன்புரிச் சங்கம் அதிபர் மேசை , கதிரை, இலத்திரனியல் உபகரணங்கள், அலுவலக   மற்றும்  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பவற்றை அன்பளிப்பாக வழங்கியது.

இந்த வைபவத்தில்  புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டுதல்  நிகழ்வும் இடம்பெற்றது. அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. ஆசிரியை வளர்மதி நன்றி உரை நிகழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here