நீர்/ அல்-பலாஹ் மகா வித்தியாலய விளையாட்டு மைதான மதில் சுவருக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, இன்று வைபவ ரீதியாக இடம்பெற்றது.

0
189

1

நீர்/ அல்-பலாஹ் மகா வித்தியாலய விளையாட்டு மைதான மதில் சுவருக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, 30/08/2017 அன்று வைபவ ரீதியாக இடம்பெற்றது.

அல்-பலாஹ் மகா வித்தியாலய அதிபர் திரு. R. உதயகுமார், அல்-பலாஹ் அபிவிருத்தி சங்க, பழைய மாணவர் சங்க வேண்டுகோளிளும், ஏற்பாட்டிலும் இந்நிகழ்வு இன்று நடந்து முடிந்தது.

மேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.எஸ்.எம். சகாவுல்லாஹ் அவர்கள் அடிக்கல் வைத்த பின்னர், நீர்கொழும்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.ஏ.சி. பெர்னாண்டோ அவர்களும், தொடர்ந்து அதிபர் உதயகுமார் அவர்களும், முன்னாள் அதிபர் முனவ்வர் ஆசிரியரும் வைபவரீதியாக கற்களை வைத்தனர்.

கௌரவ சகாவுல்லாஹ் அவர்களின் வேண்டுகோளில் அண்மையில் மேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ இசுரு தேவப்பிரிய அவர்களினால் ரூபா. 39 இலட்சம் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, சுற்று மதிலுக்கு இருபுறமும் நுழைவு வாயில் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. பாடசாலை நேரத்தில் மைதானத்தை பெண் மாணவிகளும் பயன்படுத்த பொருத்தமான ஒரு ஏற்பாடாகவே இது பார்க்கப்படுகின்றது. மட்டுமன்றி, இரவு நேரத்தில் மைதானத்தின் முறையற்ற பாவனையை விடுத்தும் தடுத்துக்கொள்ள இந்த திட்டம் வழிவகுக்கும். பாடசாலை உட்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கேமராக்கள் போலவே, மதில் அமைக்கப்பட்டதன் பிற்பாடு மைதானத்திற்குள்ளும் பாதுகாப்பு கேமராக்கள் பொறுத்தப்பட ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கான  தேநீர் விருந்து உள்ளிட்ட பங்களிப்புகளை அல்-பலாஹ் பழைய மாணவர் சங்கத் தலைவர் ஜவ்ஹார் ரஹ்மான் அவர்களின் வழிகாட்டலில் அல்-பலாஹ் பழைய மாணவர் சங்க அனுசரணையில், பழைய மாணவிகள் சங்கம் நேர்த்தியாக செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றியுரையும் பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் திரு. அக்தர் பாரூக் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

வைபவத்தின்போது நேர்த்தியான முறையில் மாணவர்கள் அனைவரும் கடும் வெப்பத்தின் மத்தியிலும் மைதானத்தில் இருந்து, தமது மகிழ்ச்சியை கரகோஷங்களாக வெளிப்படுத்தியமை, அதிபர், ஆசிரியர்களின் நிர்வாகத்திறனுக்குக் கிடைத்த பரிசு எனலாம்.