பரீட்சையில் திறமை காட்டிய நீர்கொழும்பு வலய தமிழ் மொழிப் பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு

0
211

Award Winner StudentsAl-Hilal C.College(1)நீர்கொழும்பு வலய தமிழ் மொழிப் பாடசாலைகளில்  இந்த ஆண்டு தரம் ஐந்து  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும்  பல்கலைக்க ழகங்களுக்குத் தெரிவான மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் வியாழக்கிழமை (3-11-2016) நடைபெற்றது.

மனித உரிமைக்கான  மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்கொழும்பு வலய தமிழ் மொழிப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கௌரவிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள்   உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மனித உரிமைக்கான  மக்கள் அமைப்பின் ஆணையாளர் கலாநிதி சரீக், இணைப்பாளர் தேசகீர்த்தி ஜீவரத்ன குமார், அமைப்பின் கொழும்பு இணைப்பாளர் தேசகீர்த்தி ரம்லீ , கொழும்பு மாவட்ட பணிப்பாளர் தேசகீர்த்தி  ஏ.ஏ.எம்.அஸ்வான், நிர்கொழும்பு வலய தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் மஹ்பூப் மரிக்கார் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கியதுடன், ஆசிரியர்களுக்கும், பாடசாலை அதிபர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவித்தனர்.

நிகழ்வில்  விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி அதிபர் என். புவனேஸ்வரராஜா, மனித உரிமைக்கான  மக்கள் அமைப்பின் ஆணையாளர் கலாநிதி சரீக், இணைப்பாளர் தேசகீர்த்தி ஜீவரத்ன குமார் ஆகியோர் உரையாற்றினர்.

more photo >go to the link https://www.flickr.com/photos/144292886@N06/


(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)
kalanenjan B.Ed newsharjahan@gmail.com>

Save

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here