பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி மாணவர்களுக்கு தமிழர் நலன்புரி மன்றம் நிதியுதவி

0
228

DSC00822 Ms. Siyaamali(1)DSC00809Saranya
பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி மாணவர்களுக்கு  தமிழர் நலன்புரி மன்றம் நிதியுதவி

2014 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதி பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி மாணவர்களுக்கு நீர்கொழும்பு தமிழர் நலன்புரி மன்றம் ஞாயிற்றுக்கிழமை (17-7-2016) நிதியுதவி வழங்கி கௌரவித்தது.

மன்றத்தின் தலைவர் வைத்திய கலாநிதி ஜெயலிங்கம் தலைமையில் மன்ற அலுவலகத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியத் துறைக்கு தெரிவான மாணவி  செல்வி சியாமளி, கலைத்துறைக்குத் தெரிவான மாணவிகளான  செல்வி எஸ். நுஸ்ரத் ஜஹான்,  செல்வி எஸ். சரண்யா  ஆகியோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழர் நலன்புரி மன்றத்தின் உப தலைவர்களான பி. ஜெயராமன், எம். ஏகாம்பரம், செயலாளர் கே. ஆனந்தசிவம்,  பொருளாளர் எம்.நடராஜா, உறுப்பினர்களான வைத்தியர் தரிசித்து, ஏ. தேவானந்தா, ஆர். சண்முக சுந்தரம், ராஜு நேத்தாஜி, பி. கதிர்வேல், ஜி. சசிதரன், பி.முருகவதன் உடபட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படங்கள்:

கலைத்துறைக்குத் தெரிவான மாணவிகளான  செல்வி எஸ். நுஸ்ரத் ஜஹான்,  செல்வி எஸ். சரண்யா  ஆகியோருக்கு  முறையே மன்றத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களான ஆர். சண்முக சுந்தரம், பி. கதிர்வேல் ஆகியோர் நிதியுதவி வழங்குவதையும், வைத்தியத் துறைக்கு தெரிவான மாணவி  செல்வி சியாமளி மன்றத்தின் தலைவர் வைத்திய கலாநிதி ஜெயலிங்கத்தடன் நிற்பதையும்,  தவைர் மற்றும் உதவித் தலைவர்  ஆகியோர் உரையாற்றுவதையும,; முக்கியஸ்தர்கள் அமர்ந்திருப்பதையும், மன்ற உறுப்பினர்களுடன் மாணவிகள் நிற்பதையும்  படங்களில் காணலாம்.

நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here