‘புதிய நாடொன்றுக்காக புதிய அரசியலமைப்பு’ என்ற தொனிப் பொருளில் நீர்கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு

0
207

‘புதிய நாடொன்றுக்காக புதிய அரசியலமைப்பு’ என்ற தொனிப் பொருளில்  கருத்தரங்கொன்று நீர்கொழும்பு தம்மிட்ட கார்தினல் கூரே நிலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (28-4-2017)  மாலை நடைபெற்றது.

புதிய நாடொன்றுக்காக புதிய அரசியலமைப்பு இயக்கத்தின் கம்பஹா மாவட்ட பிரிவு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் சுதந்திரத்திற்கான அரங்கம் அமைப்பின் அழைப்பாளர் பிரிட்டோ பெர்னாந்து,  பிரபல எழுத்தாளர் காமினி வியன்கொட, சட்டத்தரணி சுதர்சன் குணவர்தன, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, ஊடகவியலாளர் பிரடி கமகே உட்பட பலர் உரையாற்றினர். பிரபல பாடகர் ஜயத்திலக்க பண்டார பாடல்களைப் பாடினார்.

மேல் மாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு அமைப்பாளருமான  ரொயிஸ் பெர்னாந்து , நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் லலித் டென்ஸில் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

படம்-  பிரிட்டோ பெர்னாந்து, காமினி வியன்கொட, ஆகியோர் உரையாற்றுவதையும், பிரபல பாடகர் ஜயத்திலக்க பண்டார பாடல்களைப் பாடுவதையும், கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்

1

2

4

3

5

 

நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here