பேரீத்தம் பழத்தின் மகிமை – The glory of the date palm fruit

0
955

stock-photo-dates-on-a-palm-tree-63496930இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பல உண்டு. அனைத்துப் பழங்களும்
மருத்துவக் குணம் கொண்டவையே. ஆனால் இவற்றுள் பேரீத்தம் பழம் தனிச்சிறப்பு
வாய்ந்தது. பழங்களிலேயே தனிச்சிறப்பு கொண்டது பேரீத்தம் பழம். நல்ல தரமான, நல்ல
சத்துள்ள பேரீத்தம் பழங்கள் அரபு நாடுகளிலே விளையப்பெற்று பதப்படுத்தப்பட்டு பல
நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அரபு நாடுகளிலிருந்து 600 வகையான
பேரீத்தம் பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றுள் அஜ்வா, பரகாவி, பரீர்,
மப்ரூப், சுக்கரி, அன்பாதா போன்ற பேரீத்தம் பழங்கள் பிரசித்தமானவை.

யுனானி, ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் பேரீத்தம் பழம் முக்கிய இடத்தை வகிக்கிறது. சூரியச் சத்துக்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டுள்ள பழம் தான் பேரீச்சை. பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து, கல்சியம், விட்;டமின் ஏ, பி, பி2, பி5, விட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு மனிதனுக்கு அன்றாடம் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் பிற சத்துக்களும் இவற்றில் காணப்படுகின்றன. இதனால் தான் “மனித சமூகம் ஈத்தம் பழம் தண்ணீர் என்பவற்றுடன் மாத்திரம் வருடக்கணக்கு வாழலாம்” ~~Modern day scientists state that human beings live for years on nothing more than dates and water’’ vd V.H.W.Dowson என்பவர் குறிப்பிடுகிறார்.

OLYMPUS DIGITAL CAMERAகண் பார்வை தெளிவடைய

சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை விரும்பி உண்ணும் இந்தப் பேரீச்சம் பழம் எண்ணிலடங்காத மருத்துவக் குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பேரீச்சம் பழம் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றல் மிக்கது. மேலும் ஒரு அவுன்ஸ் பேரீச்சம் பழத்தில் 170கிராம் விட்டமின் ஏ சத்து அடங்கியுள்ளதால் விட்டமின் ஏ குறைவினால் ஏற்படும் மாலைக் கண் நோயை குணப்படுத்த பேரீச்சையே சிறந்த மருந்தாகும்.

உடல் எடையை குறைப்பதற்கு

பேரிச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தான் பலருக்கும் தெரியும். ஆனால் பேரிச்சம் பழத்தின் மூலம் உடல் எடையையும் குறைக்க முடியும் என்பது தெரியுமா? ஆம் பேரிச்சம் பழத்தில் உள்ள வைட்டமின்கள் கனிமச்சத்துக்கள் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உடலை நோய்களில் இருந்து பாதுகாப்பதுடன் உடல் எடையையும் குறைக்க பெரிதும் உதவியாக உள்ளது.

ஆகவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர் ஸ்நாக்ஸ் நேரத்தில் ஜங்க் உணவுகள் வறுத்த உணவுகள் என்று தேர்ந்தெடுத்து சாப்பிடாமல் நட்ஸ் பேரிச்சம் பழம் என்று ஆரோக்கியமானதை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். இதன் மூலம் உடலில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம். சரி பேரிச்சம் பழம் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வயிற்றை விரைவில் நிரப்பும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான செலினியம் மக்னீசியம் மற்றும் காப்பர் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களும் இருப்பதால் இவை வயிற்றை விரைவில் நிரப்புவதுடன் அளவுக்கு அதிகமாக கண்ட கண்டதை உண்பதைத் தடுக்கும்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு

பிரசவ நாளை அண்மித்து இருக்கும் தாய்மார்களுக்கு பேரீத்தை சிறந்த மருந்தாகும் பிரசவத்தில் ஏற்படும் வலியை குறைக்கவும் பிரசவத்தில் அதிக இரத்தம் வெளியேறும் போது அதனை ஈடு செய்யவும் பாலை அதிகமாக சுரக்கவும் பேரீத்தை உதவுகிறது.image

மலச் சிக்கலை தடுக்க

பேரிச்சம் பழம் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து குடலியக்கம் சீராக நடைபெற உதவும். இதனால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருப்பதோடு மெட்டபாலிசமும் அதிகரிக்கும். இதன் மூலம் உடல் எடை ஆரோக்கியமான வழியில் குறையும்.

Inline image 2         rataedi

பேரீத்தம் பழத்தின் இன்னும் சில நன்மைகள்

எலும்புகளை பலப்படுத்தும்

இளைப்பு நோயை குணப்படுத்தும்

முதியோருக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்

புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்

இதய நோய்கள் அண்டாது

வளரும் குழந்தைகளுக்கு பேரீச்சம் பழம் கொடுத்து வந்தால் அது அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும்

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த வலிமையை மீண்டும் பெற உதவும்

சளி, இருமலை குணப்படுத்த உதவும்

நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்த உதவும்

பெண்களின் ஒழுங்கற்ற மாதவிலக்கை சீர் செய்யும்

தொகுப்புஎஸ். நுஸ்ரத்ஜஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here