பொலிஸாருக்கு பயந்து மா ஓயாவில் குதித்த நபர் பலி

0
245

buru 1

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வயிக்கால சிந்தாத்ரிய பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழவினரை கைது செய்ய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாருக்குப் பயந்து  மாஓயாவில் குதித்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சிந்தாத்ரிய பிரதேசத்தைச் சேர்ந்த  35 வயதுடைய ஜோய் என்ற நபரே சம்பவத்தில் பலியானவராவார்.  இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

வென்னப்புவ , வயிக்கால சிந்தாத்ரிய பிரதேசத்தில் மாஓயாவிற்கு அருகில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு பின்பக்கமாக சூதாட்ட நிலையம் ஒன்று நீண்ட காலமாக இயங்கி வந்துள்ளது. நேற்று சனிக்கிழமை இரவு பொலிஸார் திடீர்  சுற்றிவளைப்பொன்றை அங்கு மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர். மூவர்  மாஓயாவில் பாய்ந்து  தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். இவர்களில் இருவர் ஆற்றில் நீந்தி  ஆற்றின் மறுப்பக்கமாக சென்று தப்பியுள்ளனர். ஆயினும் ஓருவர்  ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் கடற்படையினர்  சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here