‘போதைகள் அற்ற நாடு’ என்ற தொனிப் பொருளுடன் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு மாதத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று வியாழக்கிழமை (9) ஜா-எல நகர சபை விளையாட்டரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வோடு இணைந்ததாக பாடசாலைகளில் நிகழ்வு நடத்தப்பட்டு ஜனாதிபதியின் விசேட செய்தி பாடசாலை அதிபர்கள் மூலமாக மாணவர்களுக்கு வாசித்து காட்டப்பட்டது.
நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்ற போது தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட ஜனாதிபதி பங்குபற்றிய நிகழ்ச்சியை மாணவர்கள் தொலைக்காட்சியில் பார்ப்பதையும், பாடசாலை அதிபர் ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியை மாணவர்களுக்கு வாசித்து காட்டுவதையும் , ஆசிரியர் பிலீசியன் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.