மட்டக்களப்பு கல்குடா பகுதியில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் இருவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நேற்று (19) அழைக்கப்பட்டிருந்தனர்.

0
197

1

unnamed

 

கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது, கடந்த மாதம் 21 ஆம் திகதி மதுபானசாலை உற்பத்தி நிலையத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சியனர் என தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு திரியும் குணடர் குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய செய்தியாளர்களான நல்லதம்பி நித்தியானந்தன், புண்ணியமூர்த்தி சசிகரன் ஆகியோரே தாக்குதலுக்களாகியிருந்தனர்.

மதுபானசாலை உற்பத்திச் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்ற இடத்திலிருந்த சிலர் ஊடகவியலாளர்களைத் தாக்கியுள்ளதுடன், சுமார் 6 கிலோமீற்றர் வரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்திருந்தனர்.

இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் இருவரும் கடந்த 22 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்திருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்திற்கு ஊடகவியலாளர்கள் இருவரும் நேற்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது தாக்குதலுக்குள்ளான இரு ஊடகவியலாளர்களின் முறைப்பாடு தொடர்பாக பொலிசாரின் விசாரணையில் முன்னேற்றம் இல்லையெனவும், ஊடகவியலாளர்களைத் தாக்கிய ஏனைய நான்கு நபர்களும் மாதங்கள் கடந்தும் பொலிசாரினால் கைது செய்யப்படவில்லை, தாக்குதலுக்குள்ளான ஊடவியலாளர்களை வைத்து பொலிசார் மேற்கொண்ட சட்டத்துக்கு முறனான விசாரணைகள் போன்ற பல விடயங்களில் இதுவரைக்கும் எவ்விதமானதொரு முன்னேற்றங்களும் இதுவரைக்கும் பொலிசார் மேற்கொள்ளவில்லையென தெரிவித்தே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரு ஊடகவியலாளர்களும் மீண்டும் முறைப்பாட்டை பதிவு செய்திருந்திருந்தனர்.

கல்குடா கும்புமூலை வேம்பு பகுதியில் 19 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மதுபானசாலை உற்பத்தி தொழில்சாலை தொடர்பாக பல்வேறு தரப்பு மட்டுமின்றி முஸ்லிம் மக்களும் குறித்த தொழில்சாலையை நிறுத்த வேண்டுமென எதிர்ப்புக்கள் தெரிவித்துவருகின்ற நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ் மக்களுக்கு சேவைகள் செய்வோமென வெற்றி பெற்ற தமிழ் அரசியல்வாதிகளான தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சரும், ரெலோ இயக்க கட்சியின் செயலாளர் கோ.கருணாகரன் (ஜனா), தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினருமான கிருஸ்ணப்பிள்ளை (வெள்ளிமலை) ஆகிய மூவரும் மதுபானசாலையை உடன் நிறுத்துமாறு கோரிய ஜனாதிபதிக்கு அனுப்பும் மனுவில் கையொப்பம் இடமாட்டோம் என தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.