மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரியில் ஸ்மார்ட் வகுப்பறை (Smart Class Room) திறந்து வைப்பு: 32 இலட்சம் ரூபா செலவில் நிறைவு செய்யப்பட்ட திட்டங்கள் கையளிப்பு

0
235

DSC04816 மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஷாபி ரஹீமின்   நிதி  ஒதுக்கீட்டின் கீழ்   நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரிக்கு  32 இலட்சம் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு  அவற்றை   கையளிக்கும் நிகழ்வு இன்று (6-4-2018) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கல்லூரி அதிபர்  எம.எம்.எம். இர்சாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் பிரதம அதிதியாகவும், நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.ஏ.சி. பெர்னாந்து சிறப்பதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில்  ஆறு இலட்சத்து 90 ஆயிரம் ரூபா செலவில் ஸ்மார்ட் வகுப்பறை (Smart Class Room) திறந்து வைக்கப்பட்டது. மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.ஏ.சி. பெர்னாந்து ஆகியோர் ஸ்மார்ட் வகுப்பறையை  திறந்து வைத்தனர். நீர்கொழும்பு வலயத்தில் தமிழ் மொழி பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை இதுவாகும் என அங்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன்  7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் நவீன மலசல கூட நிர்மாணம் , பத்து இலட்சம் ரூபா செலவில் கட்டட புனரமைப்பு, ஐந்து இலட்சம் ரூபா செலவில் மலசலகூட புனரமைப்பு ஆகிய வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு மேல் மாகாண சபை உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டன. அத்துடன்  இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் மேல் மாகாண சபை உறுப்பினரால் அங்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

பின்னர் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நிகழ்ச்சி இடம்பெற்றது. நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், அதிதிகள் உரை என்பன இடம்பெற்றன.

 


(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)