இந்தியப் பிரதமரின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை அரச ஊடகங்கள் மற்றும் இந்திய ஊடகங்கள் தவிர்ந்த உள்நாட்டு ஊடகங்கள் அனைத்தும் செய்தி சேகரிக்கும் பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் ஊடகவியலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நரேந்திர மோடியின் யாழ் வருகை நிகழ்வுகளை சேகரிப்பதற்காக சில தினங்களுக்கு முன்னர் தம்மை பதிவு செய்யுமாறு ஊடங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டதாகவும் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களின் விபரங்களை அனுப்பிவைத்திருந்த நிலையில் இன்று செய்தி சேகரிக்கச் சென்று பல மணி நேரங்கள் காத்திருந்தபோதும் யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் தாம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக ஊடகவியலாளர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.