“விதைத்தவன் உறங்கலாம் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை”

0
671

சரித்திர நாயகன் அப்துல் கலாம் நேற்று காலமானார்

kalam 1

விதைத்தவன் உறங்கலாம் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை.” இந்திய இளைஞர்களின், அவர்களது கனவுகளின் அடையாளமாகத் திகழ்ந்த அப்துல் கலாம் இன்று காலமான செய்தியைக் கேட்டதும் இதுதான் தோன்றியது.
எப்போதும் மாணவர்கள் புடைசூழ இருப்பதையே விரும்பும் அப்துல் கலாம்
, அதே மாணவர்கள் முன்னால் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, மேடையிலிருந்து சரிந்து விழுந்த புகைப்படத்தை பார்க்கையில், கண்களின் வழியும் கண்ணீர்த்துளிகளை மட்டுமே அவருக்கு காணிக்கையாக்க முடிகிறது. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் நேற்று மாலை காலமானார். நம் மனதில், கனவுகளை விதைத்தவர் விதைகளை நம்முடனே விட்டுச் சென்றிருக்கிறார்.

இந்தியாவின் மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை சுமார் 6.30 மணியளவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த கலாம் திடீரென மார்பை பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்தார். இதனால் மேடையில் இருந்தவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மயங்கி விழுந்த அப்துல் கலாம் நாங்ரிம் மலைப் பகுதியில் உள்ள பெத்தானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து அப்துல் கலாம் மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்என்ற அவர் கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர். தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் சமுதாயத்தை தனது சிந்னைகளால் விழித்தெழ செய்தவர். உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். “ஒருவரது பிறப்பு என்பது சம்பவமாக இருக்கலாம் ஆனால் அவரது இறப்பு நிச்சயமாக சரித்திரமாக தான் இருக்கவேண்டும்” என்று நம் மத்தியில் அப்துல் கலாம் அன்று கூறிய கூற்றை இன்று நிரூபித்து விட்டே சென்றுள்ளார். ஆகவே இச் சந்தர்ப்பத்திலே டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையின் சில முக்கிய பக்கங்ளை பற்றி இங்கு குறிப்பிடுவது சாலச் சிறந்ததாக இருக்கும்.

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார்.

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில்இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பொறியில் படிப்பைசென்னையிலுள்ள எம்..டியில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினிI என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான பத்ம பூஷன்விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில்முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். அண்மையில் டாக்டர் அப்துல் கலாம் இலங்கைக்கு வருகைத் தந்து மாணவர்களுக்கான விருதுகளை வழங்கிமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உலகமே போற்றும் சரித்திர நாயகனாக விளங்கிய அப்துல் கலாம் மறைந்தாலும் அவரது சாதனைகளும் சிந்னைகளும் என்றும் மறையாது மிளிர்ந்துகொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

விருது அல்லது மரியாதை பெற்ற ஆண்டு

விருது அல்லது மரியாதையின் பெயர்

விருது வழங்கும் அமைப்பு

2014

அறிவியல் டாக்டர் (பட்டம்)

எடின்பரோ பல்கலைக்கழகம்[2]

2012

சட்டங்களின் டாக்டர் (பட்டம்)

சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகம்[3]

2011

IEEE கவுரவ உறுப்பினர்

ஐஇஇஇ[4]

2010

பொறியியல் டாக்டர் (பட்டம்)

வாட்டர்லூ பல்கலைக்கழகம்[5]

2009

ஹூவர் மெடல்

ASME மணிக்கு, அமெரிக்கா[6]

2009

சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, அமெரிக்கா[7]

2008

பொறியியல் டாக்டர் (பட்டம்)

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிங்கப்பூர்[8]பல்கலைக்கழகம்

2007

கிங் சார்லஸ் II பதக்கம்

ராயல் சொசைட்டி, இங்கிலாந்து[9][10]

2007

அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

உல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம், இங்கிலாந்து[11]

2000

ராமானுஜன் விருது

ஆழ்வார்களில் ஆராய்ச்சி மையம், சென்னை[12]

1998

வீர் சவர்கார் விருது

இந்திய அரசாங்கம்[13]

1997

தேசிய ஒருங்கிணைப்பு இந்திரா காந்தி விருது

இந்திய அரசாங்கம்[12][13]

1997

பாரத ரத்னா

இந்திய அரசாங்கம்[12][14]

1990

பத்ம விபூஷன்

இந்திய அரசாங்கம்[12][15]

1981

பத்ம பூஷன்

இந்திய அரசாங்கம்[12][15]

kalam

 

kalam 2

 

 

தொகுப்பு: எஸ்.நுஷ்ரத்