41 பேர் நாடு திரும்புகின்றனர்

0
149

ந்தியாவில் தஞ்சமடைந்திருந்த இலங்கை அகதிகள், 41 பேர், நாளை வியாழக்கிழமை (17) நாடு திரும்வுள்ளதாக,  இந்து மத அலுவல்கள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.

13 குடும்பங்களைச் சேர்ந்த 41 இலங்கையர்கள், திருச்சியிலிருந்து இலங்கைக்கு வரவுள்ளதாகவும் யுத்த காலத்தின் போது, இலங்கையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்குச் சென்று அகதி முகாமில் தங்கியிருந்தோரே, இவ்வாறு நாடு திரும்புவதாகவும் அவ் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போது சுமூகமான நிலைமை காணப்படுவதனால் இவர்களை நாட்டுக்குள் அழைத்து வர முடிந்துள்ளதாக அவ் அமைச்சு தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 1,905 குடும்பங்களைச் சேர்ந்த 5,225 பேர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளதாகவும் மேலும், 64,000 இலங்கையர்கள் 109 அகதி முகாம்களில் தங்கியிருப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டிள்ளது.ශී ලාංකිකයෝ

From- www.tamilmirror.lk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here