60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்குமாறு வலியுறுத்தி சைக்கிளில் சாதனைப் பயணம்

0
205

இலங்கையில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் இன, மத, மொழி பாகுபாடின்றி போதுமான அளவு ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை, அரசாங்கம் கொண்டு வரவேண்டும். இதன் மூலம் சகல முதியவர்களும் சுயகௌரவத்துடனும். நிம்மதியாகவும் வாழ வகை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தின் கவனத்தை இந்த விடயம் தொடர்பாக ஈர்க்கும் நோக்கில் 1515 கிலோமீற்றர் சாதனைப் பயணத்தை சைக்கிளில் ஆரம்பித்துள்ள வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த  தர்மலிங்கம் பிரதாபன் இன்று (12) இரவு 8 மணியளவில்   கொழும்பு நோக்கி செல்லும் வழியில் நீர்கொழும்பு நகரை வந்தடைந்தார்.

வவுனியாவிலிருந்து ஆரம்பித்துள்ள இவரது சாதனைப் பயணம் இன்று 5  ஆவது நாளாகும்.   கடந்த 8 ஆம் திகதி  (8-4-2017) ஆரம்பித்த இந்தப் பயணம் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் வவுனியாவில் நிறைவடையவுள்ளது.

bickman

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here