9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று மாணவி எம்.ஐ.எப். ஹிஸ்ரா சாதனை

0
174

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவி  செல்வி எம்.ஐ.எப். ஹிஸ்ரா 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமைத் தேடித்  தந்துள்ளார்.

செல்வி எம்.ஐ.எப். ஹிஸ்ரா  2010 ஆம் ஆண்டு நடைப்பெற்ற  தரம் ஐந்து பலமைப் பரிசில் பரீட்சையில் கம்பஹா மாவட்டத்தில் முதலாமிடம் பெற்று சாதனைப் படைத்தவராவார்.

கற்றோலோடு மட்டுமன்றி பல்வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் திறமைக் காட்டி வரும் இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டியில்  கட்டுரைப் பேட்டியில் (பிரிவு மூன்று) முதலாமிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றவராவார். அத்துடன் மாகாண மட்டத்தில் கணித வினாவிடைப் போட்டி, கட்டுரைப் போட்டி, இஸ்லாமிய கீதப் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் பரிசுகள் பல பெற்றவராவார்.

இவர் நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்தியக் கல்லூரி அதிபர் எம்.எம்.எம். இர்ஷாத், கொச்சிக்கடை, போருதொட்டையைச் சேர்ந்த எம்.எம்.எப். ரிஸ்மியா தம்பதிகளின்  புதல்வியாவார்.

M.I.F.Hisra

செய்தி – எம். இஸட். ஷாஜஹான்