நீர்கொழும்பு தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் ரூபராஜ் டில் றொசாலினி 9 A பெற்று சாதனை

0
122

Dil Rosaliniஅண்மையில் வெளியிடப்பட்ட 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி  நீர்கொழும்பு தோப்பு ரோமன் கத்தோலிக்க  தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ரூபராஜ் டில் றொசாலினி தேவதாசன் 9 A பெற்று சாதனை புரிந்துள்ளார்.

கல்வியைப் போன்று இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் இவர் பல்வேறு வெற்றிகளைப்; பெற்றுள்ளார். தமிழ் மொழித் தினப் போட்டி, ஆங்கில மொழித் தினப் போட்டி, விஞ்ஞான வினா விடைப் போட்டி,  சமூக் கல்வி வினா விடைப் போட்டி ஆகியவற்றில் செல்வி ரூபராஜ் டில் றொசாலினி  வலய, மாகாண , தேசிய மட்டப் போட்டிகளில் முதலாம், இரண்டாமிடங்களைப் பெற்றுள்ளதோடு தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளார். இவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தோப்பு ரோமன் கத்தோலிக்க  தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த  81 சதவீத  மாணவர்கள்   இம்முறை உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.எம்.எஸ். பிரிட்டோ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here