கல்வி அமைச்சின் ஏற்பாட்;டில் ‘போதையில்லாத சுதந்திர தேசம்’

0
241

DSC08383 DSC08387 DSC08389 DSC08385 DSC08380 DSC08381 DSC08378 DSC08377 DSC08376சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு    தினத்தையிட்டு  (26)  ‘போதையில்லாத சுதந்திர தேசம்’  எனும் தொனிப் பொருளில்  கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த வேலைத்திட்டம் நாடெங்கிலும் உள்ள   அரசாங்கப் பாடசாலைகளில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது  போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் தீங்குகள்  தொடர்பாக  வளவாளர்  ஒருவரினால் மாணவர்களுக்கு விசேட உரை நிகழ்த்தப்பட வேண்டும் என  கல்வி அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

நீர்கொழும்பு  வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில்  பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் ‘போதையில்லாத சுதந்திர தேசம்’  நிகழ்வு இடம்பெறுவதையும் , ஆசிரியை  திருமதி நேசமலர் போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் தீங்குகள்   எனும் ;தலைப்பில் உரையாற்றுவதையும்,  பாடசாலை அதிபர் உரையாற்றுவதையும் மாணவர்கள் சத்தியப்பிரமானம் செய்வதையும் படங்களில் காணலாம்.

நீர்கொழும்பு நிருபர் :- எம்.இஸட். ஷாஜஹான்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here