கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி

0
128

236e0cbada492c3c0a22e59215775515_XL

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமைத் தேடித்  தந்துள்ளனர்.

எம். மிதூசனா, ஜே. தாட்ஷாயினி, எம்.ஐ.எப்.ஹிஸ்ரா, என். நிசாந்தி ஆகியோரே 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றவர்களாவர்.

இதேவேளை, நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியில்  செல்வி. ஜே.எப்.பர்ஹத் என்ற மாணவி 8 பாடங்களில் ஏ சித்தியும் ஒரு பாடத்தில் பி சித்;தியும் பெற்று பாடசாலையில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். அந்தப் பாடசாலையில்  செல்வி எம்.எப்.எப். பஸ்னா என்ற மாணவி 7 பாடங்களில் ஏ சித்தியும், ஒரு பாடத்தில் பி சித்தியும் பெற்று இரண்டாமிடத்தை பாடசாலையில் பெற்றுள்ளார்.

நீர்கொழும்பு அல் – பலாஹ் மகாவித்தியாலயத்தில்  முஹம்மத் ரம்ஸி பாத்திமா ருசைனா என்ற மாணவி  எட்டு ஏ சித்தியும் ஓரு பி சித்தியும் பெற்று  பாடசாலையில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் செல்வி இந்திரகுமார்  டில்சானி என்ற மாணவி 4 பாடங்களில் ஏ சித்தியும், 2 பாடங்களில் பி சித்தியும் ஒரு பாடத்தில் சி சித்தியும் 2 பாடங்களில் எஸ் சித்தியும் பெற்று பாடசாலையில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்..

 

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here