கேப்பாப்புலவு மக்கள் தமது மண்மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நீர்கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

0
126

முல்லைத்தீவு கேப்பாப்புலவில்; தமது மண்மீட்புக்காக  பெண்கள் நடத்தும் தொடர் சத்தியாகிரகத்திற்கு  ஆதரவு தெரிவித்து நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையம் முன்பாக இன்று புதன்கிழமை மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  நடைபெற்றது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், மக்கள் அபிலாஷை வலையமைப்பு, காணி உரிமைக்கான மக்கள் போராட்டம் , ஸ்ரீவிமுக்தி மீனவ பெண்கள் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஹேர்மன்மார, அருட் தந்தை இத்தமல்கொட ஆகியோர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

DSC01423

DSC01428

DSC01431

DSC01432

 

 

 

 

 

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here