சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ‘அரிஸ் 13’ கப்பலில் பணியாற்றிய ஏ. சண்முகத்தின் பயங்கர அனுபவம்

0
161

ship

நாங்கள் பணியாற்றிய  கப்பலை கடத்துவதற்கு முன்னதாக  கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கப்பல் ஒன்று கடத்தப்படவில்லை. நாம் பணியாற்றிய ‘அரிஸ் 13’ (ARIS 13) என்ற கப்பலே  கொள்ளையர்களால் கடந்த  மார்ச் மாதம் 13 ஆம் திகதி கைப்பற்றப்பட்டது. அது எமது கெட்ட காலமோ தெரியாது.   கொள்ளையர்கள் எங்களை கொல்லப்போவதாகவும், வீட்டாருக்கும் எமது அரசாங்கத்திற்கும் இதுதொடர்பாக தெரிவிக்குமாறும் கூறினர். இதுபற்றி நாங்கள்  உடனடியாக எமது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலமாக தெரிவித்தோம்.  இவ்hறு  சோமாலிய கடற்கொள்ளையர்களால்  கடத்தப்பட்ட கப்பலில் பணியாற்றிய பணியாளர்களில் ஒருவரான நீர்கொழும்பு தளுபத்தையில் வசிக்கும் அப்புகுட்டி சண்முகம் (67 வயது)  தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தெரிவித்தார்.

கடத்தப்பட்ட  எரிபொருள் தாங்கிக் கப்பலில் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த 8 பணியாளர்களும் கடந்த 12 ஆம் திகதி  புதன்கிழமை (12-4-2017) விமானம் மூலம் நாடு திரும்பினர். இந்நிலையில் கப்பலில் பிரதான சமையற்காரராகப்  பணியாற்றி வந்த  அப்புகுட்டி சண்முகத்தை நீர்கொழும்பு தளுபத்தையில் உள்ள அவரது இல்லதில் சந்தித்து, கடத்தல் சம்பவம் தொடர்பாக அவருக்கு எற்பட்ட   அனுபவங்களை கேட்டோம். இன்முகத்தோடு வரவேற்ற அவர் தனக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தை தெரிவித்தார்.

எனக்கு மனைவி மற்றும் இரண்டு  ஆண் பிள்ளைகள் உள்ளனர். நான் கடந்த 30 வருட காலமாக கப்பலில் பிரதான சமையற்காரராகப்  பணியாற்றி வருகிறேன். இறுதியாக பணியாற்றிய கப்பலில்; எனக்கு திடீரென்று பணியாற்றும் வேலை கிடைத்தது. அந்தக் கப்பலில் பணியாற்றும் போது சோமாலியாவுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது.

சோமாலியாவுக்கு செல்லும் போது முதலில் ஒரு மீன் பிடி படகு நாம் பயணித்த கப்பலை சுற்றிச் வந்தது. இதன்போது எமக்கு சந்தேகம் ஏற்;பட்டது. பத்து நிமிட நேரத்தில் மீண்டும் ஒரு படகு எமது கப்பலை அண்மித்தது. அதில் இருந்தவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். நாங்கள் தண்ணீர் போத்தல்களை அவர்களுக்கு கொடுத்தோம் . இரண்டு மூன்று நிமிடங்களில்   மீண்டும் ஒரு படகு வந்து  கப்பலை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. கப்பலின் கண்ணாடிகள் உடைந்தன. ஏழெட்டு கடத்தல்காரர்கள் கப்பலில் ஏறி எங்களை கைது செய்தனர்.

கப்பல் ஒலூலா நகர கடற்பரப்புக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டது.  நாங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தோம். எம்மை அவர்கள் தாக்கவில்லை. ஆயினும் அவர்கள் மிருகங்கள் போல் பயங்கரமாக காணப்பட்டனர். அவர்களிடம் துப்பாக்கிகள் இருந்தன. நாங்கள் அவர்களின் முகத்தைப் பார்த்தால்; அவர்கள் முறைத்துப் பார்ப்பார்கள். துப்பாக்கியை தூக்குவார்கள். அதன் காரணமாக அவர்களை நேரில் காணும்போது போது நிலத்தைப் பார்த்துக்கொள்வோம். அவர்கள் தடுத்து வைத்திருந்த நான்கு தினங்களும் பத்திரிகைகளை விரித்து அதில் உறங்கினோம். எமக்கு மரண பயம் ஏற்பட்டது.

எமது கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் எமது கப்பலில் இருந்த அதிகாரிகள் கப்பல் கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவலை  உரிய அதிகாரிகளுக்கு வழங்கினர். இதன் காரணமாக கப்பல் கைப்பற்றப்பட்ட விடயம் உலகுக்கு உடனடியாக தெரிய வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கும் தெரிய வந்தது.

இதனை அடுத்து அரசாங்கம் எம்மை மீட்கும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட்டது. ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சு, கடற்றொழில் அமைச்சு மற்றும் அதிகாரிகள் துரிதமாக செயற்பட்டனர்.  அதிகாரிகள் அடிக்கடி எம்முடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தைரியம் தந்தனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைப்;;பற்றப்பட்ட கப்பல்களையும் ஆட்களையும் மீட்பதற்கு நான்கு ஐந்து வருட காலங்கள்  சென்றுள்ளன. அவர்களால் பிடிக்கப்பட்டவர்களை அவர்கள் பணம் பெற்றுக்கொண்டே விடுவிக்கின்றனர். ஆனால் எமது கப்பலையும் எம்மையும் நான்கு நாட்களில் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை  வரலாற்றில் முதல் தடைவையாகும்.

நாங்கள் மீட்கப்பட்ட அன்று  (17-3-2017) கடற்படையினர் எமது கப்பலை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். பிற்பகல் இரண்டு மணியளவில்  கொள்ளையர்கள்;  எங்களை ஒருவர் பின் ஒருவராக  கொல்லப்போவதாகவும், வீட்டாருக்கும் எமது அரசாங்கத்திற்கும் இதுதொடர்பாக தெரிவிக்குமாறும் கூறினர். இந்நிலையில் இதுபற்றி உடனடியாக  அதனை நாங்கள்  உடனடியாக எமது குடும்பத்தாருக்கு தொலைபேசி மூலமாக தெரிவித்தோம்.

பிற்பகல் நான்கு மணியளவில் கப்பலை சூழ்ந்துள்ள படையினரை அகன்று செல்லுமாறு  எமது  அரசாங்கத்திடம் தெரிவிக்குமாறும் இல்லையேல் ஒவ்வொருவராக கொல்லப்போவதாகவும்; தெரிவித்த கொள்ளையர்கள் எங்களில் ஒருவரை அழைத்துச் சென்றனர். இந்நிலையில் சில விநாடிகளில் அவர்களுக்கு தொலைபெசி அழைப்பு வந்தது. எமக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால்  அவர்கள் வசித்து வரும் அந்த தீவை அழித்துவிடுவதாக அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கொள்ளையர்கள் அச்சமடைந்தனர். கப்பலை சூழ்ந்துள்ள கடற்படையினரை விலகி நிற்க எம்மிடம் கூறுமாறு அவர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர்  கப்பலை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நிறுத்தப்பட்டது. படையினர் தூர  நின்று  நடப்பதை அவதானித்தனர். கொள்ளையர்கள் எமது பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு படகுகள்  மூலமாக ஒவ்வொருவராக  கப்பலில் இருந்து அகன்று சென்றனர்.

மாலை 5 மணியளவில் கொள்ளையர்களில்  ஒருவன் எம்மிடம் வந்து எங்களை விடுவிக்கப்போவதாகத் தெரிவித்தபோது எமக்கு ஆச்சரியமாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. அதுபோன்ற மகிழ்ச்சியை நான் வாழ்நாளில் அனபவித்தது கிடையாது. மாலை 6.30 மணியளவில் கொள்ளையர்கள் அங்கிருந்து சென்றமை உறுதிப்படுதிக்கொண்டோம். கப்பல் கப்டன்  இனி நாங்கள்  நங்கூரத்தை அகற்றி புறப்புடுவோம் என்றாhர். தூரத்தில் இருந்தபடி சோமாலிய படையினர் எம்மை அவதானித்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் இரண்டு அதிவேக படகுகளில் படையினர் எங்களை நோக்கி வந்தனர். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பாக அவர்கள் எங்களை  சோமாலியாவின் பொசாசோ நகர துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

எம்மை மீட்பதற்காக  குடும்பத்தினர் மற்றும்  பொது மக்கள் விசேட பூஜைகளை நடத்தினர். அரசாங்கத் தரப்பினர் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கினர்.  ஊடகங்கள் சிறந்த பங்களிப்பை வழங்கின. இந்த சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் நான் மீட்கப்பட்ட அனைவரது சார்பில் நன்றிகளை கூறுகிறேன். நாங்கள் தப்பியது இறைவன் செயலாகும் என்றார்.

சண்முகம் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எம்மிடம் தெரிவிக்கும் போது இடையில் கண் கலங்கினார். அனுபவத்தை விவரிக்கும் போது முகத்தில் அச்சம் தெரிந்தது. தனக்கு உதவியவர்களுக்கு அடிக்கடி நன்றிகளை தெரிவித்தார். எல்லாம் கடவுள் செயல் எனவும் . இது ஒரு கனவு போன்று இருப்பதாகவும் தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன இணைந்திருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு விடைப்பெற்றோம்.

shanmugm

shafmily

 

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here