நான் காமாச்சோடையில் வியாபாரம் (பிஸ்னஸ்) தொடங்கியது 1977 லாகும்.

0
178

11035626_400765866772142_6825431581665607677_n

நீர்கொழும்பில் காமாச்சோடைப் பிரதேசத்தில் பழைமையான வர்த்தகத் தோடு தொடர்புபட்ட கலாச்சாரத்தின் வனப்பு அங்கு செல்வோரின் மனதையீர்க்கும். இதுவரைக்கும் கடைகள் குறைந்துள்ள போதும் இந்த மிகப்பழைய கட்டிடத்தினுள்ளே நடைபெற்று வருகின்ற சம்பிரதாயபூர்வமான வியாபார நடவடிக்கைகள் மாத்திரம் இன்னும் எஞ்சியுள்ளன. மனதைக் கவரும் பொருள் பண்டங்கள், கடலைக்கடை, வாளிக்கடை, கோணி முதலான பழைய பொருட்கள் சேகரிக்கும் வியாபாரிகள், களிமட்பாண்டங்கள் பித்தளைச் சாமான்கள் முதலியவற்றைக்காணும் போது இப்பிரதேசத்தின் முன்னைய பழைய வாழ்வுமுறை பற்றி மனதில் எழும். காமச்சோடை மார்கட் வீதியைக் கடந்து வந்தது எனக்குத் தேவையான சமையல் அறை உபகரணமொன்றைத் தேடும் நோக்கத்திலாகும். அங்கே ஒரு வர்த்தக நிலையத்தினருகே தரித்தேன். அங்கிருந்த பொருட்களால் மனங்கவரப்பட்டேனென்றாலும் உண்மையாகவே நீர்கொழும்பு நகரத்துக்கு வரும் நுகர்வோர் யாவரும் செல்ல வேண்டிய ஒரு இடம் என்று உள்ளே நுழைந்ததும் புரிந்து கொண்டேன்.

20140703_151655nw

அதன் பிறகு அங்கு உரிமையாளருடன் பண்ணிய உரையாடல் அதி ரசனையாதலால் அவர் பற்றிச் சில தகவல்களை முன் வைக்கிறேன். இவ் ஸ்தாபனம் கண்டி ஸ்டோர்ஸ்என்ற பெயர் பெற்றதோடு உரிமையாளராக முஹம்மது யாசீன் நிருவகிக்கிறார்.

இந்தக் கடையைத் தொடங்கிய காலம் ஞாபகம் உள்ளதா?

1977 – 78 களில் தான் தொடங்கினேன். அப்பொழுது எனது வயது 26.

அவ்வேளை நீங்கள் திருமணமானவரா? தனியாளா?

எனது ஊர் மாவனல்ல. விவாகம் செய்ததனாலேயே இங்கு வந்தேன்.

தொடங்கும் போது எவ்வகையான பொருட்களைப் போட்டீர்?

அலுமினியப் பொருட்கள் தான் போட்டேன். 200 ரூபா, 300 ரூபா அளவு கையில் வைத்துக்கொண்டு தான் வியாபாரத்தைத் தொடங்கினேன். அக்காலம் 200 ரூபா என்பது தற்போதைய 20000 ரூபா ரூபா போலாகும்.

இனி வியாபாரம் எப்படி முன்னேறியது?

ஆரம்பத்தில் மேற்கூறியது போல வியாபாரம் நடந்து வந்தது. பிறகு எனது மனைவி தனது நகைகளை விற்று பணத்தைத் தந்து கடைக்கு முதலிடும்படி சொன்னார். பிறகு கொழும்பிலிருந்தும் கடனுக்குச் சாமான்கள் கிடைத்தன. இவ்வாறு கொணர்ந்து கொணர்ந்து முன்னேறிய வியாபாரம் இது.

அந்தக் காலம் இந்தக் கடை யாருக்குச் சொந்தமானது?

மாத்தறை அப்புஹாமி என்ற முதலாளிக்குச் சொந்தமானது.

அந்தக் கடையை அந்நாளில் 12500 ரூபாக்களுக்கு வாங்கினேன். அக்காலம் இங்கு மாத்தறை வாசிகளே இருந்தனர். இப்பொழுது மின்னாஸ் இருக்கின்ற இடத்தில் அன்று இருந்தது சொய்சா பேக்கரி ஆகும்.

இந்த வியாபாரத்தலம் எந்தப் பெயரில் பிரசித்தம் அடைந்துள்ளது?

காமச்சோடை மார்கட் வீதி கண்டி ஸ்டோர்ஸ்என்றால் யாவரும் அறிவர்.

• 83 கலவரக் காலம் ஞாபகமா?

ஆமாம் ஞாபகமுள்ளது. அப்பொழுதும் நான் இவ்விடத்தில் தான் வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தேன். மற்றக் கடைகளில் பொருட்கள் அனைத்தையும் தத்தமது வீடுகளுக்கு இழுத்தனர். நான் அப்படிச் செய்யவில்லை. இறைவன் அளித்தவையிவை, அவனே காப்பான். எனது கடையில் அப்பொழுது இருந்தது பலகைக் கதவு. அசைத்தாலும் உடையும். அதை உடைக்க வருவோருக்கும் துக்கம் ஏற்படும். பிள்ளைகள் வளர்ந்த பிறகு தான் இரும்பினால் கதவுகள் செய்தோம். மேலேயும் கடையொன்றை மகன் அமைத்து நடாத்தி வருகிறார்.

20140703_145004new
உங்கள் குடும்ப விவரங்கள் பற்றி….?

எனக்கு 3 பெண்மக்களும் ஒரு மகனும் உள்ளனர். நாங்கள் எல்லோரும் பெரியமுல்லையில் வாழுகிறோம்.

கண்டி ஸ்டோரின் பொருட்பாண்டங்கள்பற்றி என்ன சொல்லத் தோன்றுகிறது?

அலுமினியம் என்றால் ஈயமில்லாத அலுமினியமே சிறந்தது. நாங்கள் இவ் வகையான அலுமினியப் பொருட்களையே விற்பனை செய்கிறோம். மனிதனுக்கு தீங்கு விளைவிக்காத நல்ல பொருட்களையே விற்கிறோம்.

வெள்ளி, அலுமினியம், ப்ளாஸ்டிக் சிலாகை, செம்பு இவைகளால் ஆனவைகளே இவ்விடத்திலுள்ளது. ப்ளாஸ்டிக் பொருட்களை தொகை விலைக்கும் கொடுப்பதுண்டு. வீட்டுக்குத் தேவையான சகலவிதமான பொருட்களும் இங்குண்டு. இங்குள்ளோர் மாத்திரமல்ல. கந்தானை, மீரிகம, சிலாபம் முதலான இடங்களிலிருந்தும் நுகர்வோர் வருகை தருகின்றனர்.

இவ்விடம் ஒரு சிறிய இலாபத்தை வைத்துக்கொண்டு குறைந்த விலைக்கே விற்பனை செய்கிறோம். உடன் கைக்காசுக்கு ப்ளென்டரின் பாகங்கள் குக்கரின் பாகங்கள் இங்கு கிடைக்கும். கேஸ் அடுப்புகள் மண்ணெண்ணெய் அடுப்புகள், பெட்ரோல் மெக்ஸ் லைட் ஆகியவைகளின் மேலதிக உதிரிப்பாகங்கள் இங்கு கிடைக்கும். சிம்னி வகைகளும் கொத்து, றயிஸ் போடத் தேவையான உபகரணங்கள் எல்லாம்கூட இங்குண்டு.

20140703_14502520140703_152939

Kandy Stores
No 12,Market Street,negombo /
TEL-031222451220140703_152916 20140703_152720 20140703_151905