நீர்கொழும்பு நகரை உலக கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகத்தில் பதித்தார் துஷ்மந்த

0
176

chameera 5

நீர்கொழும்பை வசிக்கும் விளையாட்டு வீரர் ஒருவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்று நீர்கொழும்பை உலகக் கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளார்.

உண்மையில் இது நீர்கொழும்பை சேர்ந்த அனைவருக்கும் பெருமையாகும். துஷ்மந்த வசித்து வரும் நீர்கொழும்பில் அமைந்துள்ள 50 ஏக்கர் பரப்பைக் கொண்ட சிகிரி பாதையில் அமைந்துள்ள சிகிரி விளையாட்டுச் சங்கம் துஷ்மந்தவின் பெருமையை பறைசாற்றும் வகையிலும் தமது அன்பை வெளிப்படுத்தும் வகையிலும் துஷ்மந்தவின் வீட்டிற்கு செல்லும் வழியில்; இலத்திரனியல் எழுத்துக்களை கொண்ட ஒரு பதாகையை அமைத்துள்ளது.

நீர்கொழும்பை இந்த நிலைமைக்கு உயர்த்திய துஷ்மந்தவைப் பற்றி நாங்கள் வெளியிடும் இந்த குறிப்பு எதிர்வரும் நாட்கள் முழுவதும் நாடளாவிய ரீதியில் வெளியிடப்படவிருக்கும் தகவல்களாக இருக்கும்.

பதிர வசன் துஷ்மந்த சமீர 1992 ஜனவரி 11 ல் ராகமையில் அஜித் ஹேமந்த மற்றும் தீபா பெர்னாந்து தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். ஆரம்ப நிலைக் கல்வியை ராகமை பிரதேசத்தில் பெற்று விட்டு தனது பெற்றோருடன் நீர்கொழும்பிற்கு குடி வந்தார். ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை நீர்கொழும்பு ஹரிச்சந்திரா பாடசாலையிலும் உயர்கல்வியை நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா பாடசாலையிலும் பெற்றார்.சிறு வயதிலிருந்தே விளையாட்டில் தன் திறமைகளை வெளிக்காட்டிய சமீர 12 வயதுக்கு முதலில் இருந்தே விளையாட்டு சங்கத்தில் பிரசித்தமான வீரராக விளங்கினார்.chamera 4

சமீரவின் கிரிக்கெட் வாழ்க்கையில், 12 வயதுக்கு உட்பட்ட அணியினருக்கான கிரிக்கட் போட்டியொன்றில் ஹரிச்சந்திரா கல்லூரியை பிரதிநிதித்துவப் படுத்தி விளையாடி கொழும்பு றோயல் கல்லூரிக்கு எதிரான போட்டியில் 31 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்து வீச்சில் தன் திறமையை வெளிக்காட்டியமை சிறந்த மைல்கல்லாக அமைந்தது.

கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமன்றி மெய்வல்லுனர் போட்டிகளிலும் திறமைசாலியாக சமீர விளங்கினார்.அத்துடன் ஓடுதல் மற்றும் மைதான போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றார்.பந்து வீச்சில் மட்டுமன்றி துடுப்பாட்டத்திலும் சிறந்த வீரராக திகழ்ந்தார்.அவர் தனது பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட காலங்களில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் இறஙகினார். கிரிக்கெட்டில் இருந்த திறமையின் காரணமாக நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியில் நுழைந்து அங்கேயும் தன் திறமையை வெளிப்படுத்திய சமீர சர்வதேச போட்டிகளில் விளையாடும் வரம் பெற்றார்.

பாடசாலை வாழ்க்கையை தொடர்ந்து 23 வயதுக்கு உட்பட்ட நீர்கொழும்பு லியோஸ் விளையாட்டுச் சங்கத்தில் இணைந்து போட்டிகளில் விளையாடினார். அதைத் தொடர்ந்து 2012 ல் N.C.C விளையாட்டு சங்கத்தில் இணைந்து தன் திறமைகளை விருத்தி செய்தார்.பின்னர் இலங்கை  A அணி மற்றும் கிரிக்கெட் சபையின் தலைவர் அணியை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் தேசிய அணியில் இடம் பெறுவதற்கான சூழ்நிலையையும் ஏற்படுத்திக் கொண்டார்.

chameera 1 இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளிலே மெதியூஸின் தலைமையில் கிழக்கு நகாஸ் அணியினை பிரதிநிதித்துவப் படுத்தினார்.பின்னர் நியுசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்ற தனது முதலாவது ICC போட்டியில் விளையாடினார்அன்றைய நாளிற்கான வேகமான பந்தை வீசி நியுசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரரான ரோஸ் டெய்லரின் விக்கெட்டை கைப்பற்றி தனது முதலாவது ICC விக்கட்டை பதிவு செய்தார்.
chameera 3chameera 6

Meepuranews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here