நூற்றாண்டு விழா காணும் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு

0
274

DSC07662

இந்த வருடம் நூற்றாண்டு விழா காணும் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின்  ஸ்தாபகர்  தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (22-3-2015) மாலை நீர்கொழும்பு அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலின் ஜுப்லி மண்டபத்தில் நடத்தப்பட்டது.

அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின்  நீர்கொழும்பு தலைவர் ஐ.ஏ.அஸ்லம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மௌலவி எம்.;ஏ. அஸ்மத் அஹ்மத்  , ஜமாஅத்தின்  தேசிய பிரசாரச் செயலாளர் அப்துல் ஹஸீஸ், எஸ்.ஏ.தாரிக், எம்.ஸாஜஹான் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில்  உர்து நஸம் (கீதம்;)  , கஸீதா என்பனவும் இடம்பெற்றன.

அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் இலங்கையில் அமைக்கப்பட்டு  இந்த வருடம் நூறாண்டுகள் பூர்த்தி அடைவதையிட்டு, இந்த வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளதாக ஜமாஅத்தின்  தேசிய பிரசாரச் செயலாளர் தெரிவித்தார்.Mahulavi Asmath DSC07649 DSC07655 DSC07658
நீர்கொழும்பு நிருபர் :- எம்.இஸட். ஷாஜஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here