பிள்ளைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பப் பத்திரங்கள் 200 ரூபாய் ?

0
580
mee
Photo by M.Z Sajhan

நீர்கொழும்பு கல்வி வலயத்தில் பிரதான கத்தோலிக்க பாடசாலைகள் சிலவற்றில் பிள்ளைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பப் பத்திரங்களை பெற்றுக் கொள்ள 200 ரூபாய் தொடக்கம் 500 ரூபாய் வரை அறவிடப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

பாடசாலையில் சேர்த்தாலும் சேர்க்கா விட்டாலும் இந்த விண்ணப்பப் பத்திரத்தை பணம் செலுத்தியே பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் பாடசாலையில் அந்தப் பிள்ளை சேர்க்கப்படாது விட்டாலும் அந்தப் பணம் திருப்பி செலுத்தப்பட மாட்டாது என்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் ஒரு பிள்ளையை பாடசாலையில் சேர்ப்பதற்கான விண்ணப்பப் பத்திரத்திற்கு இவ்வளவு பணம் அறவிடப்படுவது ஏன் என்பதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here