Saturday, June 20, 2026

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 277 பேர் கைது

Must read

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (25) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 86 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 112 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 73 பேரும், கஞ்சா செடிகளுடன் 06 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 61 கிராம் 161 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 744 கிராம் 377 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 507 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 257,991 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article