கோவிலாய் மீன்பிடி கிராமம் கடுமையான கடற்கரை அரிப்புக்கு உள்ளாகி வருவதாக கிராமவாசிகள் நீண்ட காலமாகத் தெரிவித்து வருகின்றனர்.







டித்வா (Ditwah) சூறாவளி கோகிலாய் கிராமத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது நிலைமை மேலும் தீவிரமடைந்து வருகிறது.
இது தொடர்பாக அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது குறித்து கோகிலாய் கிராம மக்கள் கடுமையான கவலையில் உள்ளனர்.
சமுத்திரங்களைப் பாதுகாப்பது தொடர்பாக நடாத்தப்படும் சர்வதேச தினக் கொண்டாட்டங்களைக் கடந்து, கடற்கரையைப் பாதுகாப்பதற்குத் தேவையான விஞ்ஞான மற்றும் சுற்றுச்சூழல் வேலைத்திட்டமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மற்றும் கொழும்புக்கு மீன் விநியோகிக்கும் பிரதான மீன்பிடி கிராமங்களில் கோகிலாய் கிராமமும் ஒன்றாகும்.
இது தொடர்பில் அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட வேண்டும்.


