Saturday, October 17, 2026

கலாநெஞ்சன் ஷாஜஹான் ‘தினச்சுடர் தேசிய  விருது’ வழங்கி வழங்கி கௌரவிப்பு

Must read

கவிஞரும், எழுத்தாளரும் ஊடகவியலாளருமான  கலாநெஞ்சன் ஷாஜஹான் தினச்சுடர் தேசிய  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பொது வாசிகசாலை மண்டபத்தில்  இன்று வியாழக்கிழமை (17 – 09 -2026) 
நடத்தப்பட்ட  விருது வழங்கும் விழாவிலேயே அவர் விருது வழங்கி   கௌரவிக்கப்பட்டார்.

கலை, இலக்கியம்  மற்றும் ஊடகத்துறைக்காக நீண்ட காலமாக வழங்கி வரும்  பங்களிப்புக்காக இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டது.

தினச்சுடர் பத்திரிகையின் ஆசிரியர் மூத்த ஊடகவியலாளர் ஏ.எம்.  முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக புரவலர் ஹாசிம் உமர் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக  பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  கலந்து சிறப்பித்தார்.

கலாநெஞ்சன் ஷாஜஹான்  ஊடகத்துறை, கலை இலக்கியத்துறை மற்றும் சமூக சேவைக்காகப் பல்வேறு உயர் பட்டங்கள் வழங்கி ஏற்கனவே கௌரவிக்கப்பட்டுள்ளார்

​சாமஸ்ரீ தேசகீர்த்தி, கவித்தீபம்,
​காவிய பிரதீப,
கலாபூசண லங்காபுத்ர
​​தேசபந்து,
ஜனமாத்திய சிரோமணி ஜாதிக்க அபிமானி, சமாஜ சேவா விபூஷண கீர்த்தி ஸ்ரீ விஸ்வ கீர்த்தி  ஆகியவை அவர் பெற்றுள்ள முக்கிய கௌரவ பட்டங்களாகும்.

சக்தி நிவ்ஸ் பெஸ்ட், சிரஸ நிவ்ஸ் பெஸ்ட்  , சக்தி எப்.எம். , வீரகேசரி, தமிழ் மிரர், தமிழன் உட்பட பல ஊடகங்களில் இவர்  பிராந்திய  ஊடகவியலாளராக நீண்ட காலம் பணியாற்றி வருகிறார்.
அத்துடன் இவர் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபரும் சமாதான
நீதவானும் ஆவார்

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article