Saturday, June 20, 2026

மட்டக்களப்பு முதலைக்குடா மகா வித்தியாலய அதிபராக அரசரத்தினம் கிருபாகரன் கடமை பொறுப்பேற்பு

Must read

மட்டக்களப்பு மேற்கு வலய முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் 40 வது அதிபராக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த அரசரத்தினம் கிருபாகரன் இன்று (30) திங்கட்கிழமை கடமையை ஏற்றுக்கொண்டார் .

முன்னாள் அதிபர் வைரமுத்து சுந்தரநாதன் அண்மையில் ஓய்வு பெற்றதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கே மேற்படி அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மகிழடித்தீவு சரஸ்வதி வித்யாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற்றி நேற்று பதவி உயர்வு பெற்று இன்று கடமையை ஏற்றுக்கொண்டார் .

இன்று முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் பாடசாலை பிரதி அதிபர் பேரின்பராஜா கிருபாகரன் தலைமையிலான பாடசாலை சமூகம் அவரை வரவேற்று கௌரவித்தது.

அவர் சுவாமி விபுலானந்தர் சிலைக்கு முதலாவதாக மாலை அணிவித்து தமது கடமைகளை பொறுப்பேற்று க்கொண்டார்.
அவ்வமயம் ஆசிரியர்கள் முன்னாள் அதிபர் சிவ.அகிலேஸ்வரன் மற்றும் மகிழடித்தீவு ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வீரமுனையைச் சேர்ந்த கிருபாகரன் தற்பொழுது ஆரையம்பதியில் வசித்துக் கொண்டிருக்கின்றார்கள்

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article