Saturday, June 20, 2026

மின்சார சபையின் புதுப்பிக்கத்தக்க சக்தி 70% உற்பத்தி வரலாறு

Must read

2025 ஜூன் மாதமளவில் இலங்கை மின்சார சபையானது அதன் மின்சார உற்பத்தியில் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

1990ஆம் ஆண்டின் முற்பகுதிக்குப் பிறகு முதல் முறையாக, இலங்கை மின்சார சபையானது இந்த மாத நிலவரப்படி அதன் மொத்த மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெற்றுள்ளது.

ஏனைய மாதங்களை விட இந்த மாதம் தேவை அதிகமாக இருந்த சூழ்நிலையில் இவ்வாறு நிறைவு செய்யப்பட்டாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் மின்சார விநியோகம் சுமாமர் 100 சதவீதம் நீர் மின்சாரம் சார்ந்தது என்ற ஆரம்பகாலக் கொள்கையிலிருந்தும், காலப்போக்கில் பின்பற்றப்பட்ட கலப்பின நீர் மின் – அனல் மின் கொள்கையிலிருந்தும் ஒரு விலகலைக் காட்டுவதாக மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் புதுப்பிக்கத்தக்க பங்கை அதிகரிப்பதற்கான இலங்கை மின்சார சபையின் நிலையான திட்டத்தின் வெற்றியை இது பிரதிபலிப்பதாகவும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article