மே-18 முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமான நிலையில், இலங்கை தமிழரசு கட்சி ஏற்பாட்டில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அக்கட்சியின் மானிப்பாய் தொகுதி சார்பில் வலி.தெற்கு பிரதேச சபை முன்றலில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் பதில் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பிரதான சுடரை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்


